இன்று அமைந்தகரையில் அமைந்துள்ள அம்பா ஸ்கை வாக் (SKYWALK) எனும் வணிக வளாகத்தினுள் புகுந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க கோரி முற்றுகையிட்டனர். வணிக வளாக அனைத்து தளங்களிலும் சென்று மாணவர்கள் தங்கள் கோரிக்கையினை சுட்டிக்காட்டி கோசமிட்டனர். வணிக வளாகத்தில் வருகை தந்திருந்த அனைத்து வாடிக்கையாளர்களின் கவனத்தையும் இப்போராட்டம் ஈர்த்தது .
பின்னர் கே.எப்.சி (KFC) உணவகத்தினுள் புகுந்த மாணவர்கள் அங்கு இருந்த மக்களிடம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையினை எடுத்துக் கூறி அமெரிக்கா தகுந்த ஆதரவு தரவில்லை மற்றும் கே.எப்.சி. நிறுவனத்தில் இருந்து அமெரிக்காவுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவும் கூறி மாணவர்கள் தங்கள் முற்றுகையினை நடத்தினார்கள். தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு அமெரிக்க அரசு ஆதரவு வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர் மாணவர்கள். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு வலுவான தீர்மானத்தை ஐநாவில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த மக்களை வெளியே அப்புறப்படுத்தி கடையினை ஒரு மணிநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து போராட்டம் நடத்தினார்கள். ஒரு மணிநேரம் கழித்து காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மாணவர்களை கைது செய்துள்ளனர்.
சுமார் 50 மாணவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை காட்டினர்.இவர்கள் போராட்டம் காவல்துறைக்கு முன்னதாகவே தெரியாத காரணத்தால் அவர்களை கைது செய்ய வாகனங்கள் கொண்டுவரப்படவில்லை.
பின்னர் காவல்துறையினர் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் மாணவர்களை கைது செய்து அமைந்தகரையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
அமெரிக்க பொருட்கள் புறக்கணிப்பு போராட்டம் மேலும் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். துணிச்சலாக வணிக வளாகத்தின்
நன்றி
உள்ளேயே சென்று முற்றுகையிட்ட மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment