மலேசிய விமானம் எம்எச்370 காணாமல் போய்ச் சரியாக எட்டு நாட்கள் ஆன நிலையில், மலேசியப் பிரதமர் நஜிப் சனிக்கிழமை கோலா லம்பூரில் செய்தியாளர்களைச் சந் தித்தார். விமானத்தின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் வேண்டும் என்றே துண்டிக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகத் தெரிகிறது. விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் விமா னம் கடத்தப்பட்டது உறுதியாக வில்லை என்று அவர் தெரிவித்திருந் தார். விமான ஊழியர்கள், பயணி கள் குறித்தும் மலேசிய காவல்துறை கவனம் செலுத்தும் எனவும் பிரதமர் நஜிப் குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் பேட்டியளித்த சில மணி நேரத்தில், விமானி அகமது ஷா வீட்டிற்கு மலேசிய காவல்துறை சென்றது. விமானி வீட்டு விமானச் சோடனைச் சாதனமும் சோதனையிடப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், ஆனால் இவை எல்லாம் வழமையான நடைமுறை கள்தான் என்றனர்.
இதற்கிடையே, எம்எச்370 விமானி அகமதின் குடும்பம் தனது வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. விமானம் காணமற் போய் விட்டபிறகு விமானியின் குடும்பத் தினர் வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாக ஸ்டார் செய்தித்தாளில் வெளியான செய்தி ஒன்று குறிப் பிட்டுள்ளது. இவ்வேளையில், மர்மமாகவே இருந்துவரும் இந்த விமானப் பேரிடரை மலேசியா திறம்பட கையாளவில்லை என்று சொல்லி நேற்றுச் சீனாவில் புதிதாக கடும் குறைகூறல்கள் தலைதூக்கின. ஒரு வார காலத்தை மலேசியா பாழக்கிவிட்டதாகவும் பலரும் புகார் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment