சிவகங்கை: ‘தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நமக்கு இது சோதனையான காலம்தான்,'' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். சிவகங்கையில், மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது: அகில இந்திய அளவில் காங்கிரஸ் சோதனையான காலக்கட்டத்தில் உள்ளது. காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தமிழகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதால் கொள்கைகளை விட்டுத்தர முடியாது. உரிய பணிகளை ஆற்றிட வேண்டும். தேர்தலில் எப்படி செயல்படுவது என்பதுதான் தற்போது நமக்குள்ள முக்கிய கடமை. பா.ஜ.க. ஒரு புதிய தலைவரை முன்னிலைப்படுத்தி வேகமாக காரியங்களை செய்து வருகிறது. அதை மறுப்பதற்கில்லை. பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரு முகம். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு பல முகங்கள் உள்ளன. அதில் அரசியல் முகம்தான் பா.ஜ.க. இன்று நமக்கும், பா.ஜ.க.வுக்கும் போட்டியில்லை. நமக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தான் போட்டி என்ற நிலை. ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்க்கும் சக்தி காங்கிரசாரான உங்களிடம் இருக்கிறது. நமக்கு எதிராக வலதுசாரிகள், ஆதிக்க சக்திகள் உள்ளன.
அடுத்து வருவது காங்கிரசுக்கு யுத்த காலம். இதில் வெற்றிபெற வேண்டும் என்றால் மிக, மிக நுண்ணிய முடிவு எடுக்க வேண்டும். இன்றைய கூட்டத்தில் இந்த தேசத்திற்கு எதிரான சோதனைகளை பற்றி கோடிட்டு காட்ட வந்துள்ளேன். ஆதிக்க சக்திகளை விரட்டுவதுதான், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். புதியவர்கள் வரும்போது, முதியவர்கள் விலகி இளைஞர்களுக்கு வழி விடவேண்டும். நமது கட்சியில் இளைஞர்களே அதிக அளவில் இல்லை. அவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பதவி வழங்க வேண்டும். பொதுவாக தலைமையில் உள்ளவர்களுக்கு எளிதாகப் பேசத் தெரியவேண்டும். தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நன்கு எழுதப்பேச தெரிந்தவர்களாக இருப்பார்கள். தற்போது நமது அகில இந்திய தலைவர்களும் பேசுகின்றனர். எல்லா நிலையிலும் நன்கு பேச, எழுத தெரிந்து கொள்ள வேண்டும். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுகோப்போடு இருந்து பாடுபட வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment