ஜம்மு: முஸ்லிம்கள் பாதுகாப்பில் இந்து மருத்துவர் ஒருவரின் திருமணம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுள்ளது.
ஆஷிஷ் ஷர்மா என்ற மருத்துவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 11-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரு பிரிவினருக்கிடையே கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது.
இதனால் ஆஷிஷ் ஷர்மாவின் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த அவரது குடும்பத்தார் எவ்வளவோ முயன்றும் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ பாதுகாப்பு அளிக்க தயாராக இல்லை. இந்நிலையில் ஆஷிஷ் ஷர்மா வசிக்கும் பகுதிக்கு அருகில் வசிக்கும் முஸ்லிம்கள் இவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, "உங்கள் வீட்டு திருமணம் நடைபெறும் வரை நாங்கள் பாதுகாப்பாக நிற்கிறோம்" என்று கூறி பாதுகாப்பு வழங்கினர்.
இதுகுறித்து கூறிய மணமகன் ஆஷிஷ் ஷர்மா, "எங்கள் பகுதி முஸ்லிம்கள் கூறியபடியே ஏராளமான முஸ்லிம்களின் பாதுகாப்புடன் எனது திருமணம் வெகு விமர்சையாக நடந்தது, இங்கு வாழும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. பல ஆண்டுகளாக எங்களை பிரிக்க நினைக்கும் சக்தியோடு தான் நாங்கள் போராடி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment