சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. மாணவர்களுடைய அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதோடு அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஆசிரியப் பெருமக்களே !
1. தங்களைப்பற்றி...2. தங்களிடம் கல்வி கற்ற அன்றைய மாணவர்கள் - இன்றைய மாணவர்கள் வித்தியாசம் கூறுக...
3. பெற்றோர் - ஆசிரியர் - மாணாக்கர் ஆகியோருக்கு கூறும் அறிவுரை...
ஆகிய கேள்விகளை முன்வைத்து அதிரை நியூஸின் நேர்காணலுக்காக அதிரை காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி. N.M. முஹம்மது ஹனிபா அவர்களை அருமையானப் பொழுதில் அவர்களின் இல்லத்தில் சந்தித்து கருத்தைப்பெற்றோம்.
ஹாஜி N.M. முஹம்மது ஹனிபா அவர்களைப்பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த 1961-63 ஆம் ஆண்டில் ஆசிரியப் பயிற்சியை முடித்தவுடன் தான் பிறந்த ஊரில் உள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து பின்னர் 1999 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்.
தற்போது நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில் பொறுப்பில் இருக்கும் இவர் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக 'பள்ளிக்கல்வி புரவலர் பட்டயத்தை' அன்றைய கல்வி அமைச்சரிடம் பெற்றவர்.
No comments:
Post a Comment