Latest News

மரண தண்டனை - ரிஸானா நபீக் !



அல்லாஹ்வின் திருப் பெயரால்....

இலங்கையை சேர்ந்த சகோதரி ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற செய்தி உலக மக்களை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த மரண தண்டனை நிறைவேற்றாமல் போயிருக்கூடாதா! என்று கேள்விகள் ஒவ்வொருவரின் எண்ணத்தில் இருந்தது என்னவோ உண்மை தான்.


அல்லாஹ்இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தைவழங்குவானாகஅவரின் பெற்றவர்கள்உற்றவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் உறுதியைகொடுத்து அவர்களின் கவலைகளைப் போக்கிவிடுவானாக!

விஷயத்துக்கு வருகின்றோம். இம்மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஊடகங்களில் நம்இஸ்லாமியச் சகோதரர்களும் ஏனையவர்களும் நிதானமிழந்து தன் ஆத்திரத்தை வார்த்தைகளில் இஸ்லாமிய சட்டத்தையும், சவுதி அரசாங்கத்தையும் கொட்டிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.


இந்த மரணச் செய்தி எல்லோருக்கும் மிகவும் கவலையான செய்திதான்அதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால் கவலைகஷ்டங்கள் வரும்போதும் அது பற்றிய செய்திகள் வரும்போதும்மிகவும் பொறுமையும்நிதானமும் தேவை. அதனால் தான் இப்படியானசந்தர்ப்பங்களில் "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் இறைவன்புறத்தே இருந்து வந்தவர்கள் அவன்பாலே மீள உள்ளவர்கள்என்று கூறுமாறு நபியவர்கள்கற்றுத்தந்தார்கள்இது நிதானத்தையும்மன அமைதியையும் போதிக்கும் வார்த்தைகளாகும்.

ஆனால் சிலர் சவூதி அரசை காரசாரமாக விமர்சிக்கின்றனர்பலர்முஸ்லிம் சகோதரர்கள் உட்பட,சவூதிச் சட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து க் கொண்டு இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைவிமர்சிக்கின்றனர்சிலர் மன்னிக்க மறுத்த பெற்றோரை வஞ்சிக்கின்றனர்.

இந்த சொற்பொவை நடுநிலையோடு கேளுங்கள்.



இந்த விஷயத்தில் ஒரு இஸ்லாமியனினதும்ஒரு நியாயவாதியினதும் பார்வை இப்படிதான்இருக்க வேண்டும்ஷரிஆ சட்டம்பாதிக்கப்பட்டவன் தரப்பில் இருந்தே குற்றத்தைப்பார்க்கின்றதுஅது பாதிக்கப்பட்டவனுக்கு நீதியையும்குற்றவாளிக்கு வழங்கும் தண்டனைமூலம் பார்த்திருப்பவர்களுக்கு படிப்பினையையும்குற்றம் செய்யும் பயத்தினையும்வழங்குகின்றது.



வாதத் திறமையும்சந்தர்ப்ப சாட்சியங்களும்தான் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதைதீர்மானிக்கும் விஷயமாகும்குறிப்பாக மரண தண்டனைத் தீர்ப்பானது கண்மூடித்தனமாக எடுத்தஎடுப்பில் எடுக்கப்படும் தீர்மானம் கிடையாதுஇதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்அதிலும்குறிப்பாக ரிசானா விஷயம் ஏழு ஆண்டுகள் நீண்ட ஒரு வழக்காகும்உலக நீதியைமறுமைநாளில் அல்லாஹ்வின் நீதி நியாயத்தை நினைவில் கொண்டு நீதி பெற முயற்சிக்குமாறு நீதிவாதிகளுக்கும் (LAWYERS) நீதிவழங்கும் நீதிபதிகளுக்கும் (JUDGES) இஸ்லாம் உத்தரவிடுகின்றது.


இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானாவிஷயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது



1. ரிசானா எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும்அவருக்கு நன்மையேஅல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக் கொள்வார்.

2. அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள்அநியாயக்காரர்கள்அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும்தப்ப முடியாது.

3. மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும்அவர்விரும்பினால் மன்னிக்கலாம்மன்னிக்காமலும் விடலாம்அவர் மன்னிக்கவில்லை என்பதற்காககுற்றவாளியோபாவியோ கிடையாதுஅல்லாஹ் வழங்கிய உரிமையில் தலையிடவும்அவரைவஞ்சிக்கவும் நாம் யார் ?


4. 18 வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச்சட்டம் கிடையாதுஅது உலகச் சட்டம்பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல்அதுஆளுக்காள் வித்தியாசப்படும். 18 என்று உலக வழக்குப்படி எடுத்துக்கொண்டாலும் கூடரிஸானா18 வயதைத் தாண்டாதவர் என்று எமது நாட்டு நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை சரியானமுறைப்படி கடைசிவரை சஊதி நிதிமன்றதைச் சென்றடையவில்லையேஇது யார் குற்றம் தீர்ப்புவழங்கிய சஊதி அரசின் குற்றமாஅவர்களின் ஆவணப்படி ரிஸானா 18 வயதைத் தாண்டியவர்.


இது இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும்எனவேமுஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பயந்து பேச வேண்டும்எந்த ஆதாரங்களும் இல்லாமல்,எதார்த்தம் என்னவென்று தெரியாமல்கேள்விப் பட்டவைகளை வைத்துக் கொண்டு சட்டம்பேசக்கூடாதுவார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது.


அதேபோல் காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்ந்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள்இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது.உலகிலேயே பாலியல் பலாத்காரம்கொலைகொள்ளைஅனாச்சாரங்கள்கீழ்சாதிக்கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும்இது அமெரிக்க அண்மைய ஆய்வுகள்கூறுகின்றன.


தண்டனை வழங்கப்பட்ட ஒரு ரிசானாவைப் பற்றி இன்று பலர் பேசுகின்றனர்.பரிதாபப்படுகின்றனர்ஆனால் ஆயிரமாயிரம் வீட்டுப்பணிப் பெண்கள் ரிசானாக்கள் இன்னும்அரபுலகிலும் உள்நாடுகளிலும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்வேதனையும்வெட்கமும் என்னவென்றால் பரிதாபப்படும் பலர் இப்படியான ரிசானாக்களைஉருவாக்கியவர்களாகவும்கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர்.


நீதியாகவும் நியாயமாகவும் சிந்தித்தால் இந்த ரிசானாவும் இப்படியான ரிசானாக்களும் உருவாகபல காரணங்களும்பல காரணகர்த்தாக்களும் உள்ளனர்ரிசானாவுக்கு அநீதி இழைப்பட்டிருந்தால் அதில் பலரும் பங்காளிகளே.


1. மஹ்ரம் (தக்க துணைஇல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றது ரிஸானாக்களின் குற்றம்.


2. தக்க துணை இன்றி வறுமைக்குப் பயந்து அல்லாஹுக்குப் பயம் இல்லாமல் தனிமையில் தன்மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தது பெற்றோர்கள் செய்த குற்றம்.


3. வறுமையில் வாடும் சமூகத்துக்கு கைகொடுக்காமல்அவர்களுக்குச் சேர வேண்டிய ஸகாத்(ஏழை வரிப்பணத்தைக் கொடுக்காமல் மறுக்கும் பணக்காரக் கொள்ளையர்கள் செய்த குற்றம்.


4. திருமணமுடிக்க வீடுபணம் வேண்டும் என்று பெண்களை மாடாய்ப் படுத்தும் சீதனம் கேட்கும்மானங்கெட்ட ஆண்கள் செய்த குற்றம்.


5. பணத்திற்காக பெண்களை வெளிநாட்டுக்கு ஏற்றி கூட்டிக்கொடுக்கும் முகவர்கள் செய்தகுற்றம்.


6. வெளிநாட்டு வருவாய்காக தன் நாட்டுப் பெண்களை வெளிநாட்டுக்கு கூலி வேலைக்கனுப்பியகூறு கெட்ட அரசுகள் செய்த குற்றம்.


7. இஸ்லாமிய சட்டத்துக்கு மாற்றமாக அந்நிய பெண்களை தன் நாட்டில்வீட்டில்வேலைக்கமர்த்திய ஸஊதி அரசு செய்த குற்றம்

பாவிகளும் நாங்களேஅப்பாவிகளும் நாங்களேபரிதவிக்கச் செய்பவர்களும் நாங்களே,பரிதாவப்படுபவர்களும் நாங்களேஎல்லாம் நாங்களே.


இனியும் இந்தக் கொடுமைகள் நடக்கக்கூடாது என்றால்எந்த ரிஸானாவுக்கும் இப்படி ஒரு நிலைவராமல் இருக்க வேண்டும் என்றால் உடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை இதுதான்.


1. பணிப்பெண்ணாய் வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்புவதை அரசு உடன் தடுத்து நிறுத்தவேண்டும்.


2. தற்போது தனிமையில் வெளிநாட்டுக்கு சென்று வேலைசெய்யும் பணிப்பெண்கள்அனைவரையும் உடன் திருப்பி அழைக்க வேண்டும்.


3. சீதனத்தை சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும்.


4. உலமா சபை பணக்காரர்களிடமிருந்து ஜகாத்தைப் பிடுங்கி ஏழைகளிடம் கொடுக்க வேண்டும்.


5. பெண்கள் சமூகப் பாதுகாப்புக்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவை எல்லாம் சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தை சரியான முறையில் விளங்கி நம் வாழ்வில் கடைப்பிடித்தால் மட்டுமே சாத்தியம்.


அபூ இமான்
நன்றி: www.idealvision.comwww.mujahidsrilanki.com 
நன்றி  : அதிரைநிருபர் பதிப்பகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.