Latest News

அதிரையை அசத்தும் பொரிச்சப் புரோட்டா [ காணொளி ]


அதிரையிலுள்ள ஒவ்வொரு தெருவிலும் விரல் விட்டு எண்ணிகிட்டே வந்தால் எப்படியும் புரோட்டாக் கடைகளின் எண்ணிக்கை 50 ஐ தாண்டும். அந்தளவிற்கு இரவு வேலை உணவாக இவற்றை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிரை புரோட்டா என்றாலே தனி ருசி அதுவும் இரவு நேரக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொரிச்சப் புரோட்டாவிற்காக அலைமோதும் கூட்டங்களால் வியாபாரம் படு ஜோராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தினமும் வாடிக்கையாக இவற்றை வாங்கிச் செல்வதுதான் பெரும் வேடிக்கை. அதுவும் விஷேச தினங்களில் !? கொத்து புரோட்டா, முர்தபா போன்றவற்றை கடைகளில் தயாரிக்கப்படும் போது  கமழுகின்ற நறுமணமும், அங்கே எழுப்பப்படும் ஓசையும் அனைவரையும் சுண்டி இழுத்துவிடும்.

1.  தினமும் புரோட்டா சாப்பிட்டால்தான் எனக்கு தூக்கமே வரும் எனச் சொல்வோரும்...

2. என்னால் வேலை பார்க்க முடியாதுங்க !? ப்ளீஸ்...வீட்டுக்கு வரும் போது அப்படியே புரோட்டா வாங்கிட்டு வந்துடுங்க என வாடிக்கையாகச் சொல்லும் வீட்டுக் கண்மணிகளும்...

3. புரோட்டாவுடன் சால்னாவை ஊற்றி ஊறவைத்து தனது குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பெற்றோர்களும்...

4. 'முன்பசி'க்கு எனச் சொல்லி முன்பாகவே கடைகளுக்குச் சென்று ருசித்து சாப்பிடும் இளைஞர்களும்...

என இருக்கத்தான் செய்கின்றனர்.

இப்படி அதிரை மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள பொரிச்ச புரோட்டாவின் செயல்முறை விளக்கத்தைக் இங்கே காண்போம்...

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
மைதாவைப் பற்றி இணையத்தில் கிடைத்த தகவல் நமக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிற‌த்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைட் ( Benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா.

( ( Benzoyl peroxide ) என்பது நாம் முடியில் டை அடிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ப்ரொட்டீன்னுடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாக அமைகிறது. மேலும் இது தவிர, Alloxan என்னும் ரசாயன‌ம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinamotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இது மைதாவை மேலும் அபாயகரமாக்குகிறது.

இதில் Alloxan சோதனைகூடத்தில் எலிகளுக்கு நீரழிவுநோய் வரவைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக ப்ரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணைபுரிகிறது. மேலும் மைதாவில் செய்யப்படும் புரோட்டா ஜீரணத்துக்கும் உகந்தத‌ல்ல. இதனால் சிலருக்கு சாப்பிட்ட ப்ரோட்டா செரிக்காமல் அஜீரண கோளாறு உண்டாகிறது. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழ்ந்தைகளுக்கு மைதாவினால் செய்யப்பட்ட பேக்கரி பண்டம் உணவுகளை கொடுக்கக்கூடாது.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.