ஒரு சிறு தவறுக்காக
அப்பா அன்று
திட்டினார் என்று
ஊரையே விட்டு ஓடினேன் !
எதுவுமே அறியாத
இரண்டு கெட்டான்
வயது பதினைந்து
இருபது வருடங்கள்
கழிந்து, அங்கேயும்
இங்கேயும் சுற்றி
திரிந்துவிட்டு, முப்பத்தி
ஐந்து அகவையில்
இப்போதுதான் ஊருக்கே
திரும்புகிறேன் சொகுசான
பேருந்து, சுகமான தூக்கம் !
கண்விழித்துபோது, தெரிந்தது,
'வெள்ளிமலை' [ கிராமம் ]
என்ற பதாகை [ போர்டு ]
வரவேற்றது !
மண்சாலையைக் காணோம் !
தார்சாலையில் இறங்கி
நடந்தேன் ! ஊரைச்சுற்றி
இருந்த மலைகளையும்
காணோம் !
வழியில் ஒரு வாலிபரிடம்,
தம்பி ! ஊரைச்சுற்றி
மேற்கே பனிகள் படர்ந்த
மேற்குமலை தொடர்ச்சி
இருக்குமே !
மனிதர்கள் மிருகங்கள்
பறவைகள் என்று
எல்லோருக்கும் வனங்களில்
வளங்கள் வழங்கி
மழைபெய்ய காரணமாக
இருந்ததே அது எங்கே ?
என்றேன்...
வைத்துவிட்டார்களே' என்றார்
என்ன தம்பி சொல்கிறாய் !
என்று வெள்ளந்தியாய்
கேட்டேன் 'மலைகளை
உடைத்து, வயிறு புடைக்க
உண்டு ஏப்பம்
விட்டுவிட்டார்களே' என்றார்.
'மலை முழுங்கி மஹாதேவன்
என்பார்களே ! அவர்கள்தான்
இவர்கள் என்றார்.
அடே ! உதாரணங்கள் கூட
உண்மையாகி விட்டதே ! என்ற
வியப்பில் சிந்தனை சென்றபோது,
தம்பி ! வளங்கள் வழங்கும்
வாய்க்கால்கள், ஆறுகள்
ஏரிகளைக் காணோமே !
அது எங்கே ? என்றேன்...
அதோ ! நீண்ட வால்கொண்ட
'வால்மார்ட்' கட்டிடம்
தெரிகிறதே அதுதான்
என்றார் வியப்பு மேலிட
மேலும் நடந்த போது,
நாம் தாகம் தீர்க்க
தண்ணீர் அருந்துவோமே
வண்ணச்சிறவிகளும், வாத்துகளும்
நீந்துமே தாமரைக்குளம்
அதாவது உண்டா என்றேன்...
ஓ...! அதுவா ?
'கேம்பஸ் கிளப்' என்ற பெயரில்
'வால்மார்ட்'டின் முதலை
முதலாளிகளின் சூதாட்ட
கூடமாகி விட்டதே என்றார்.
வீட்டின் நெருக்கத்தில்
அப்பாவும், அம்மாவும்
நின்றிருந்தவரை, முப்பத்தி
ஐந்து வாலிபனாக
மொழு மொழு என்றிருந்த
என்னைப் பார்த்ததும்,
ஒரே நேரத்தில் இருவருக்கும்
ஆனந்த அதிர்ச்சி !
பரஸ்பரம் சுகமும்,
நலமும் விசாரிப்பு
முடிந்ததும் கேட்டேன்.
'அம்மா ! அறுவடை
முடிந்தபின்னர், தாளடிகளில்
வாய்க்கால், வரப்புக்களில்
மாடுகள் மேயுமே அந்த
வயல்களாவது மீதமுண்டா ?'
என்றேன்.
அதற்குள் அப்பா
முந்திக் கொண்டு
அதோ ! கரகர வென்று
உருளைகள் உருளும்
சப்தம் காதை துளைக்குதே !
'உலகமயமாக்கள் தொழிற்
கூடம்' அந்த இடம்தான் தம்பி
என்றார்.
மூச்சுத்திணறி, அப்போது
மயக்கம் போட்டு கீழே விழுந்தவன்தான்
இப்போதுதான் கண் திறந்தேன்
அம்மாவின் மடியில்
தலைவைத்துப் படுத்திருக்க
அப்பா மோரும் நீரும்
தந்து ஆசுவாசப்படுத்தினார்
அக்காவும், தம்பிகளும்
தங்கைகளும் கவலை தோய்ந்த
முகத்துடன் நின்றிருந்தனர்
அப்பா சொன்னார்
'தம்பி ! நாம் கலியுக
அழிவின் விளிம்பில்
நிற்கின்றோம் என்றவர்.
வெள்ளிமலை [ கிராமத்தில் ]
அடையாளங்களை இழந்து
விட்டோம், இழந்தது
வெள்ளிமலை மட்டுந்தானா ?
இந்திய கிராமங்களும்தான்
என்றார் அப்பா ஆராத்துயரில்...
"புதுமைக்கவி"
அதிரை அப்துல் ரஜாக்
வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்களைக் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது ஒவ்வொரு ஊரிலும் நடக்கக்கூடிய ஒன்றாகும்.
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊரை பார்ப்பவர்கள் எதோ அயல் நாட்டைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
புதுமைக்கவியின் கவிதை அருமை !
தொடர வாழ்த்துகள்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteஎனது நண்பனி தந்தைக்கு நான் என் முதல் கண் சலவாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன் ( அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்) காக்கா உங்களின் இந்த வரிகள் எனக்கு ஒரு கவிதையாக தெரியவில்லை நிஜத்தை தாங்கள் வார்த்தைகளின் வரிகளாக தந்துள்ளீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நெல்கலஞ்சியம் என்று பெயர் பெற்ற நமது தஞ்சை மாவட்டம் இன்று வெளி மானிலங்கலிருந்து நெல் இறக்குமதி செய்யும் அளவிற்க்கு நிலைமை தல்லப்பட்டுயுள்ளது என்றால், அதற்க்கு காரணம் அழிவின் விளிம்பே என்று சொன்னால் ஆச்சரிப்படுவதற்க்கு இல்லை என்றுதான் அர்தம். மிக ஆழமான அழகான் கருத்து. காலத்து ஏற்ற கருத்து வாழ்த்துகள்.
அன்புடன்
அதிரை M. அல்மாஸ்
நான் கிராம சூழலை மிகவும் நேசிப்பவன் ஒரு காலத்தில் காட்டுப்பள்ளி தர்காவை சுற்றியும் ஜுமஆ பள்ளி பின்புறமும் காண்பதற்கு வெண் மணல்கள் பளீரென்று இருக்கும் ஆனால் இன்றோ மணல் களெல்லாம் குறைத்து மாசு படிந்து சுவடேமாறி காட்சி அளிக்கின்றது கணக்கில் அடங்காதவை எத்தனையோ வுண்டு இது கருத்து சொல்லும் பகுதி என்பதால் இந்த ஒரு விஷயத்தை மட்டுமே குறிப்பிட்டு இருக்கின்றேன். இவை எல்லாம் காணும்பொழுது நாம் இருப்பது அழிவின் விளிம்பே!!!! என்றுதான் தோன்றுகிறது.
ReplyDelete" கனத்த இதயத்துடன் இயற்கையின் அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வாடுபவனில் நானும் ஒருத்தன் "
ரசாக் காக்கவின் கவிதையை வாசித்து விட்டு விடாமல் முடிந்த வரை இயற்கையை காப்பாற்ற உறுதி மொழி ஏற்று கொள்ளுங்கள்