கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில், ராணுவ ரகசியங்களை கடத்தியதாக கைது செய்யப் பட்ட தமீம் அன்சாரி என்பவருக்கு ஜாமீன் கிடைத்தும் வெளிவர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம் ஊரைச் சேர்ந்த தமீம் அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்கள், இராணுவப் பயிற்சி மையம், கடலோரக் காவல்படையின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், வரைபடங்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் மாதம், திருச்சி கியூ பிரிவு காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
இந்தநிலையில் வழக்குப் பதிவு செய்து 90 நாள்கள் கழித்தும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், தமீம் அன்சாரியின் வழக்குரைஞர்கள் திருச்சி குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-ல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் தமீம் அன்சாரியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநில அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. இவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்துள்ளதால், ஜாமீன் கிடைத்தும் வெளியே வர முடியாத நிலை உள்ளது.
மேலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் தமீம் அன்சாரி மீது தவறாகப் பயன் படுத்தப் பட்டதாக கோரி அவரது வழக்குரைஞர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
நன்றி
www.inneram.com
www.inneram.com
No comments:
Post a Comment