சினிமா...
இயக்குநர் வீடு...
புல்வெளி நடுவே...
கம்பீரமாய் காட்சி தந்தது
என்றும் அமைதியான சூழல்
அன்று மட்டும்
அமைதி குலைந்து காணப்பட்டது
ஆசையாய் வளர்த்த மகள்
குமரி என்று பாராமல்
குழந்தையாய் வளர்ந்த மகள்
வளர்ந்து ஆளாகி
ஓடிவிட்டாள் ஒருவன் கூட
கடிதம் கூறியது அவள் காதலை
கதறி அழுதாள் தாயவள்
தயங்கி நின்றார் இயக்குனருமே ..!
ஆறுதலுக்கு சொந்தங்கள்
சொல்லால் ஒத்தடம் இட
அங்கு வந்தார் நம் கவிஞானி ..!
அனைவரும் சினம் கொள்ளும் வண்ணம்
அதிர சிரித்தார்...! என்சிரித்தீர் ? என்று
பலர் கேட்க... பதில் பகர்ந்தார் கவிஞானி
இயக்குனரின் படம் பார்த்து
ஆயிரம் ஆயிரம் மணங்கள்
பாலாகி பெற்றவர்களை விட்டு
ஓடியபோது...
இயக்குனரின் படத்தின்
வெற்றி என்றார்கள்
அவர் மகள் ஓடியது மட்டும்
துயரமா !?
பல ஆண்டு காலம்
காதல் பாடம் கொடுத்த
இயக்குனருக்கு...
ஒரே நாளில் ஓராயிரம்
பாடத்தை அவர் மகள்
கொடுத்து விட்டால்...
என்று சிரித்தார் கவிஞானி...!
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்
No comments:
Post a Comment