பிலால் நகர் - நமதூரைச் சேர்ந்த பல்வேறு தெருக்களிலிருந்து குடிபெயர்ந்தோராக ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேரில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என குடிசைகளில் வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் சமிபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து ஆங்காங்கே வெள்ளக்காடு போல் காட்சியளித்தன. இதையடுத்து பாதிப்புக்குள்ளான வெள்ளப்பகுதிகளை படம்பிடித்து காணொளி வடிவில் நமதூர் வலைதளங்களில் பதிவு செய்து வெளியிடப்பட்டன.
சமூக ஆர்வலரும், AAMF – இலண்டன் கிளையின் ஒருங்கிணைப்பாளருமாகிய சகோ. இம்தியாஸ் அவர்களின் முயற்சியால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு - இலண்டன் கிளை சார்பாக ரூபாய் 25,725/- வசூல் செய்து அனுப்பி வைத்தனர். இப்பணத்தை பாதிக்கப்பட்ட பிலால் நகர் பொதுமக்களுக்கு AAMF – ABM இனைந்து வழங்கும் வெள்ள நிவாரண நிதி உதவியாக விநியோகம் செய்ய கேட்டுக்கொள்ளப் பட்டதையடுத்து,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை சேர்ந்த தலைமை நிர்வாகிகள் :
ஜனாப் M.M.S. சேக் நசுருதீன்
ஜனாப் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர்
ஜனாப் K.M. பரகத் அலி
ஜனாப் M.A. அஹமது ஹாஜா
ஜனாப் S.M.A. அஹமது கபீர்
ஜனாப் மான் A. நெய்னா முஹம்மது
ஜனாப் A. முஹம்மது மொய்தீன்
ஜனாப் E. வாப்பு மரைக்காயர்
அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகள் :
ஜனாப் பேராசிரியர் S. பரகத்
ஜனாப் S. அப்துல் ஹமீத்
ஜனாப் O.K.M. சிபஹத்துல்லா
ஆகியோர் பங்களிப்புடன் பிலால் நகர் பகுதியில் குடிசையில் வசிக்கும் 50 பேருக்கு தலா ரூபாய் 500/- வீதமும், ஒரு நபருக்கு ரூபாய் 725/- ம் வழங்கப்பட்டன. அனைத்து பயனாளிகளும் வருகை தந்து அவர்களுக்குரிய நிதியினை பெற்றுச்சென்றனர்.
நிகழ்ச்சியின் இடையே மூதாட்டி ஒருவர் 'தனக்கு நிதி உதவி வழங்கப்படவில்லை' என்ற வேண்டுகோளை வைத்தார் இதையடுத்து AAMF'ன் செயலாளரும், பேராசிரியருமாகிய சகோ. M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தன்னுடைய பாக்கெட்லிருந்து ரூபாய் 500/- ஐ அம்மூதாட்டிக்கு வழங்கியது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழவைத்தது.
நிதி உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும், துஆவையும் AAMF மற்றும் ABM சார்பாக இந்நிகழ்ச்சியில் தெரிவித்துக் கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சிக்குரிய அனைத்து பொறுப்புகளையும் சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக செய்துருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment