சென்னை: புனே நகரில் நேற்று இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை நகரிலும், மாநிலத்தின் இதர முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புனே நகரில் நேற்று குறைந்த சக்தி கொண்ட நான்கு குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இனால் புனே நகரில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் தலைநகர் சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து வருகின்றனர்.
விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள் அனைத்திலும் வாகனத் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இரவு நேர வாகனத் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment