அதிரை பைத்துல்மால் சார்பாக நமதூர் A.J. பள்ளி வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற மாதாந்திரக் சிறப்புக் கூட்டதிற்கு ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களின் தலைமையிலும், பேராசிரியர் பரகத், ஹாஜி ஜனாப். S. அப்துல் ஹமீத், அக்பர் ஹாஜியார், O.K.M.சிபஹத்துல்லா, S.M. முஹம்மது முஹைதீன், A. முஹம்மது முஹைதீன், A.S. அப்துல் ஜலீல் O. சாகுல் ஹமீத், ஹாஜி. ஜனாப் சி. முஹம்மது இப்ராஹீம், வாப்பு மரைக்காயர் ஆகியோர் முன்னிலையில் இனிதே ஆரம்பமானது
நிகழ்ச்சியின் நிரலாக.....
1. கிராஅத் மெளலவி அப்துல் காதர் ஆலிம் அவர்கள்.
2. வரவேற்புரை சகோ. பேராசிரியர் பரகத் அவர்கள்.
3. புனித ரமலான் மாத “ஜக்காத்” மற்றும் “பித்ரா” நிதி வசூல் செய்வது தொடர்பான ஆலோசனையில் “கடந்த வருடத்தைக் காட்டிலும் இவ்வருடமும் அதிகமாக “ஜக்காத்” மற்றும் “பித்ரா” நிதி வசூல் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தாராளமாக உதவிட உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது” என்று முடிவு செய்யப்பட்டது.
4. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிறநாடுகளிலுள்ள சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் அதிரை பைத்துல்மாலுக்கு ஜகாத், ஃபித்ரா மற்றும் நன்கொடைகளை வழங்கும்படி நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துபாய் கிளை சார்பாக முயற்சிகள் மேற்கொண்டதற்கு, இக்கூட்டத்தில் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் அதிரை பைத்துல்மால் சார்பாக தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் இது போல் மற்ற முஹல்லாவாசிகளும் அதிரை பைத்துல்மாலுக்கு ஜகாத், ஃபித்ரா மற்றும் நன்கொடைகளை வழங்குவதற்கு தங்கள் முஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள் இட்டு நிதி வசூல் செய்து தரும்படி அன்புடன் கேட்டுக்கொண்டனர்.
அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பரகத், செயலாளர் ஹாஜி ஜனாப். S. அப்துல் ஹமீத், துணைத்தலைவர் வழக்கறிஞர் A. அப்துல் முனாப், அதிரை பேரூராட்சியின் தலைவர் S.H. அஸ்லம் ஆகியோரின் அன்பான, கண்ணியமான, உருக்கமான, கம்பீரமான வேண்டுகோள் காணொளி வடிவில், பதிவில் தொடராக.....
நன்றி :சேக்கனா M. நிஜாம்
விரைவில் இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment