“அதிரை எக்ஸ்பிரஸ்”ஸில் சமீபத்தில் பதியப்பட்ட சகோ. N. ஜமாலுதீன் அவர்களின் “அதிரையில் நடமாடும் கொரியர் கம்பெனி” என்ற பதிவை அடுத்து, சகோ. தொனா.கானா. முத்துமரைக்காயர் மற்றும் அவரது முடியாத தம்பி சகோ. தொன.கானா. முஹம்மது நூர்தீன் ஆகியோர்களின் ஏழ்மை நிலையை எண்ணி அவர்களுக்கு உதவிடும் வகையில் நமதூர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத்தலைவருமாகிய ஹாஜி ஜனாப். M.S. ஷிஹாபுதீன் அவர்கள், சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களைத் தொடர்பு கொண்டு ரூபாய் 5000 /-ம் வழங்குவதாக அறிவித்தவுடன் சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் சேமிப்பு கணக்கிற்கு பணத்தையும் உடனே அனுப்பி வைத்தார்கள்.
இன்று சகோ. தொன.கானா. முத்துமரைக்காயர் மற்றும் அவரது முடியாத தம்பி சகோ. தொன.கானா. முஹம்மது நூர்தீன் ஆகியோர்கள் சேக்கனா M. நிஜாம் அவர்களின் வீட்டில் அவர்களின் குழந்தை இஃப்ரா நிஜாமுதீன் அவர்களிடமிருந்து தலா ரூபாய் 2500/- வீதம், இருவரும் ரூபாய் 5000/- த்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்கள்.
இவ்வுதவியை வழங்கிய ஹாஜி ஜனாப். M.S. ஷிஹாபுதீன் அவர்களுக்கு தங்களின் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்ததோடு, எங்களின் ஏழ்மையான சூழ்நிலையை அனைவரும் அறிய வேண்டி எடுத்துச்சென்ற “அதிரை எக்ஸ்பிரஸ்” தளத்திற்கு தங்களின் நன்றியையும், வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக்கொண்டார்கள்.
தொனா(க்)கானா’வின் உருக்கமான வேண்டுகோள் !
Thanks : Adirai Xpress
No comments:
Post a Comment