Latest News

  

“விழிப்புணர்வு” பக்கங்கள் புத்தகம் வெளியீடு அறிவிப்பு !



அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்) எல்லாப் புகழும் இறைவனுக்கே ! நமது சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகளை எளிய வடிவில் அமைத்து, நமதூரைச் சார்ந்த சகோதரர்களின் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் போன்றவற்றில் பதிந்துவருகின்றவற்றில் கீழ்க்கண்ட கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, 'விழிப்புணர்வு பக்கங்கள்' என்ற பெயரில் என் முதல் நூலாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளேன். (இன்ஷா அல்லாஹ் ! )சீட்டுக் கட்டு ராஜா ! ரேஷன் கடைகளில் முறைகேடா ? லஞ்சமா ? கலெக்டரிடம் புகார் செய்ய ! தகவல் அறியும் உரிமைச் சட்டம்
6.
7.
8.
9.
10.
11.
12.
13. V.A.O.
14.
15.
16.
17.
18.
19.
20. TEEN AGE –
21.
22.
23.
கவனம்: நிலம் வாங்கும் முன் ! பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் ? கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட... கலப்படம் ஓர் எச்சரிக்கை ! சிட்டுக் குருவியைக் காணவில்லை ! வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு ! வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ? வின் பணிகள் யாவை ? புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ? தண்ணீர் சேமிப்பீர் ! அதிரைக் கடல் ! குடிக்காதே ! அதிரையின் விருந்து உபசரிப்புகள் ! மந்திரவாதி ! பருவம் ! கள்ளக் காதல் ! மரணத்தின் நிரலாக.....! பயண அனுபவங்கள்

1.
2.
3.

4.

5.

6.

7.
8.

எனக்கு ஊக்கம் கொடுத்து, நல்ல பல ஆக்கங்களைப் பெறும் விதமாகப் பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அன்பைக் காட்டிய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் சகப் பதிவர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.................. பல வேலைகளுக்கிடயே எனக்காக நேரத்தை ஒதுக்கி, இந்நூலில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து தந்ததோடு, நல்ல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும், எனக்கு ஊக்கம் கொடுத்ததோடு, நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. ஜமீல் M.ஸாலிஹ், மற்றும் வலைத் தள நிர்வாகிகள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக..................மேலும் எண்ணற்ற வலைத் தள நண்பர்களை உருவாக்கித் தந்து, எழுத்து மற்றும் எழுத்து சார்ந்த நல்ல பல விசயங்களை நான் மேலும் கற்றுக்கொள்ள நல்ல அடித்தளமாக அமைத்துக் கொடுத்த நமது அதிரைச் சகோதரர்களின் வலைத்தளங்கள் மட்டுமே என்றால் மிகையாகாது ! நாம் அதிகமாகப் பேசாவிட்டாலும் நமது எழுத்துகள் கண்டிப்பாக அடுத்தவர்களை விழிப்புணர்வு பெறவைக்கும் (இன்ஷா அல்லாஹ்!) என்ற நம்பிக்கையில்................... இது ஒரு இலவச வெளியீடாகும். எனது சொந்தச் செலவில் முதல் பதிப்பாக ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன் என்பதையும்............... இந்நூலை நமதூரிலும் வெளிநாடுகளில் உள்ள நமது சமுதாயம் சார்ந்த பொது அமைப்புகளிடமும் வழங்கி, வெளியிட ஏற்பாடு செய்து, அதன் மூலம் கிடைக்கப்பெறுகிற நிதியை அந்தந்தப் பொது அமைப்பின் சமுதாயச் சேவைகளுக்கென்று பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். இதற்காகத் தங்களின் மேலான கருத்துகள் ஆலோசனைகளை எதிர்பார்த்தவனாக............. மேலும் நமது இணையதள வாசகர்கள் படிப்பதற்கு இலகுவாக நமது சகோதர வலைத் தளங்களில் "நூல் வடிவில்" (E-BOOK) பதிவேற்றம் செய்யப்படும் (இன்ஷா அல்லாஹ்!) என்பதையும்………… இப்புத்தகம் மூலமாக நீங்கள் பெறப்போகும் பயனை உங்கள் மூலமாகப் பலரும் இலவசமாகப் பெறுவதற்கு நீங்கள் மறுபதிப்பு செய்து வெளியிட எனக்கு முழு சம்மதம் என்பதையும்………….. இப்புத்தகத்தின் பாகங்கள் ஒன்று இரண்டாகி, மூன்று நான்காகி........என சக பதிவர்களின் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள் பங்களிப்புடன் தொடர வேண்டும் என்பதையும்............... இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
,
சேக்கனா
M. நிஜாம்


1.
2.
3.
4.
5.
shakkananijam@gmail.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.