AAMF’ன் அவசரக் கூட்டத்தில்
அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 04-05-2012 ) அன்று கடற்கரைத்தெரு முஹல்லாவில் நடந்த ஐந்தாவது கூட்டத்தில், அல் அமீன் பள்ளி சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்துப் பேசுவது என்ற தீர்மானத்தை எடுத்து, இன்று அஸர் தொழுகைக்குப் பின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக, ஒவ்வொரு முஹல்லாவிலிருந்தும் தலா இருவர் வீதமும், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பாக இரண்டு நபர்களும், நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் ஆகக் கூடுதல் இருபத்திமூன்று நபர்களைக் கொண்ட ‘அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி’ என்ற பெயரில் உருவாக்கி, அல்லாஹ்வின் பள்ளியைக் கட்டி எழுப்புவது என்றும், அதன்படிக் கீழ்க்கண்ட புதிய நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது:
தலைவர் : மெளலவி முஹம்மது இப்ராகிம் ஆலிம்
துணைத் தலைவர் : M.M.S. சேக் நசுருதீன்
துணைத் தலைவர் : S.M.A. அக்பர் ஹாஜியார்,
செயலாளர் : S.K.M.அஹமது அன்சாரி
துணைச் செயலாளர் : A. நெய்னா முஹம்மது ( மான் )
துணைச் செயலாளர் : S. அஹமது ஹாஜா
பொருளாளர் : M.S. ஷிஹாபுதீன்
செயற்குழு உறுப்பினர்கள்:
M. நிஜாமுதீன்
P.M.K. தாஜுதீன்
M.I. முஹம்மது பாக்கர்
S. S. சேக்தாவுது
M.A. அஹமது ஹாஜா
J. சாகுல் ஹமீத்
K.M. பரக்கத் அலி
K. யாஹியா கான்
S.M.A. அஹமது கபீர்
S. அஹமது ஜலீல்
E. வாப்பு மரைக்காயர்
A. முஹம்மது மொய்தீன்
N.M. ஜபருல்லா
I. இஷாக்
மர்ஜூக்
S. அப்துல் ரெஜாக்
இந்தக் கமிட்டியின் அடுத்த கூட்டம் வருகின்ற19/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்).
No comments:
Post a Comment