தாஜூல் இஸ்லாம் சங்கம் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுடன் கூடிய அமைப்பாக சிறந்து விளங்குகிறது. இதன் நிர்வாகிகளால் தெருவில் நடக்கக்கூடிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பத்துடன், சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் போன்றவைகளையும் தீர்த்து, நல்ல பல ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இளைஞர்களால் நடத்தப்படுகிற தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) மும், இத்தாய் சங்கத்துடன் இணைந்து இருப்பதால் கூடுதல் வலிமையுடன் என்னற்ற சேவைப் பணிகளை தொய்வின்றி செயல்படுத்தப்படுகிறது
சேவைகள் சில :
1. இச்சங்கத்தை ஒட்டி அமைந்துள்ள கட்டிடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான “ அல் குரான் “ ஓதுதல் பயிற்சியும் வழங்கி வருவது கூடுதல் சிறப்பாகும்.
2. சிறுவர் பூங்கா, தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பாக அதன் நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட இச்சிறுவர் பூங்கா மூலம் இத்தெருவைச் சேர்ந்த ஏராளமான சிறுவர் சிறுமிகள், பெண்கள் என பலரும் பயனடைகிறார்கள்.
3. தெருவோரம் மரங்கள் நடுதல்
4. பெண்களுக்கான தையல் பயிற்சிப் பள்ளி
5. இப்பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையில் ஏறக்குறைய ஆயிரம் நபர்களுக்கு மேல் வந்து பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். இவர்களுக்கு ஏற்படுகிற சில சிரமங்களை கருத்தில்கொண்டு, தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பாக நிழற்க்கூரை ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. இந் நிழற்க்கூரை இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயன் தருவது குறிப்பிடத்தக்கது.
அன்புடன்,
M. நிஜாம்
GOOD JOB FOR ADIRAI TIYA WEST
ReplyDeleteI really appreciate what TIYA has done the job, Pls clean the floor properly where you made the roof, I request you to maintain the plants on street last my vacation It was not properly maintained and I did not see any proper growth of plants (we need to do immediately)which is pouring water during summer and cover the plants properly.
ReplyDelete