அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை- காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதையில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலானது மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந் தாங்கி, மார்க்கமாக இயக்கப்பட்டது. மயிலாடுதுறை- காரைக் குடி இடையே அகல ரெயில்பாதை மாற்றும் பணிக்காக 2006-ல் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை- காரைக்குடி இடையேயான அகல ரெயில்பாதை மாற்றும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டும் இன்னும் பணி முடியவில்லை. இதனால் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு பலமுறை கடிதம் மூலம் கோரிக்கை வைத்தோம். இதை கவனத்தில் கொள்ளப்படவில்லை.
ரெயில்வே நிர்வாகத்தின் இச்செயலானது இயற்கை நீதிக்கு புறம்பானது. எனவே மயிலாடுதுறை- காரைக்குடி இடையேயான அகல ரெயில் பாதை மாற்றும் பணியை விரைவாக முடித்து அதிராம்பட்டினம் வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வேக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் இதுகுறித்து 6 வாரத்தில் பதில் அளிக்கும்படி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment