வாய்க்கால்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் குளத்திலிருந்து வழிந்து நிறம்புகின்ற நீரானது சீராக செல்ல முடியவில்லை. இதனால் அருகில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் புகுந்து விடுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்கால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் சம்பந்தமாக இன்று காலை ஆர். டி. ஓ ( RDO ), பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர், ஏரிபுறக்கரை ஊராட்சி தலைவர், பட்டுக்கோட்டை சர்வேயர், கிராம நிர்வாக அதிகாரி ( VAO ) மற்றும் தலையாரி ஆகியோர்கள் மீண்டும் வந்து ஆய்வு செய்தார்கள்.
செலியன் குளம் :-
குளத்தின் அடிப்பகுதியில் இருந்து நீர் கசிந்துகொண்டு இருக்கிறது. மேலும் குளத்தின் கரைகளில் முறையான தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் உடையும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள தாழ்வானப் பகுதிகள் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
ஆதலால் இக்குளத்தின் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நமது பேரூராட்சியின் அனுமதியோடு தமிழக அரசின் “ தன்னிறைவுத் திட்டம் “ மூலமாக முறையான ஒரு தடுப்பு சுவர் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கலாமே !
தன்னிறைவுத் திட்டம் : - ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம்” )
கிராமங்கள், நகரங்களில் மக்கள் விரும்பும் திட்டங்களை தன்னிறைவுத் திட்டம் மூலம் மேற்கொள்ளலாம். திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் செலுத்த வேண்டும். ( உதாரணமாக நாம் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலுத்தினால் அரசு சார்பில் கூடுதலாக இரண்டு லட்சங்கள் பெற்று நமக்கு வேண்டிய திட்டங்களை செயல் படுத்திக்கொள்ளலாம் )
அரசுப் பள்ளிக் கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள், பள்ளிக் கழிவறைகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கும் அரசு விடுதிகள் கட்டுதல், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை வளர்ப்பு மையங்கள், நூலகங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், ரேஷன் கடைகள் ஆகியவற்றை கட்டுவதற்கு இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.
சமுதாய சொத்துக்களை உருவாக்குதல், குடிநீர் ஆதாரம் உருவாக்குதல், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், தானியகளம் அமைத்தல், ஊரக குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகங்களை பராமரித்தல், பாலங்கள் அல்லது சிறுபாலங்கள் கட்டுதல், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்திட்டம் மூலம் மேற்கொள்ள முடியும்.
இறைவன் நாடினால் ! விழிப்புணர்வுகள் தொடரும்....................
அன்புடன்,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )











No comments:
Post a Comment