தஞ்சை ரெயிலடி அருகே சீனிவாசகம் பிள்ளை சாலையில் ஓரியண்டல் ஓட்டல் உள்ளது. சுமார் 100 அறைகள் கொண்ட அடுக்கு மாடியாகும். பிரபலமான இந்த ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கி உள்ளனர். இன்று காலை ஓட்டலில் திடீர் என தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ ஓட்டல் முழுவதும் பரவியது. இதனால் ஓட்டலில் இருந்து கரும்புகை வெளியே கிளம்பியது...
இதனை பார்த்த ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அலறியடுத்து ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி : மாலைமலர்
No comments:
Post a Comment