Latest News

பகவத் கீதையை படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும்

பகவத் கீதையை படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும்-பா.ஜ.க அமைச்சரின் வெறித்தனமான பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு


பெங்களூர்:கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வருகின்றன...
இந்நிலையில் கர்நாடாகாவை கற்காலத்திற்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவின் கல்வி அமைச்சர் பகவத் கீதையை படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வெறித்தனமாக பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் கோலாரி நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு பேசிய கர்நாடகா கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, ‘பள்ளிகளில் பகவத் கீதையைப் படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை சிலர் எதிர்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விடலாம்  என்று கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரின் பேச்சைக் கண்டித்து சமதா சைனிக் தள மாணவர் சங்கம் காகேரியின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.

அமைப்பின் மாநிலத் தலைவர் கோவிந்தய்யா இதுகுறித்துக் கூறுகையில், கர்நாடக அரசு அனைத்துப் பள்ளிகளையும் ஆர்.எஸ்.எஸ். முகாம்களாக மாற்ற முயற்சிக்கிறது.
எங்களுக்கு பகவத் கீதையின் அத்தியாயங்கள் எதையும் கற்றுத் தர வேண்டாம். அதற்குப் பதிலாக அரசியல் சாசனத்தின் அத்தியாயங்களை கற்றுக் கொடுங்கள் என்றார்.
கர்நாடக தலித் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மாரிசாமி கூறுகையில், நூலகங்கள், சிறந்த உணவு, தூய்மை ஆகியவற்றை பள்ளிகளுக்குத் தர வேண்டும். அதை விட்டு விட்டு பகவத் கீதையை கற்றுக் கொடுப்பதால் என்ன லாபம் என்று வினவினார்.
இதேபோல பல்வேறு கட்சியினரும் காகேரியின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறுகையில், காகேரி மீது முதல்வர் எதியூரப்பா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும் என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.