Latest News

இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள்!! மோடி அறிவிப்பு!!

ஆமதாபாத், ஜூன் 6:   பாபா ராம்தேவோடு   உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்:  *   இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே தேசபிதா காந்தியை கொன்றது இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் யாராலும் மறுக்க முடியாது.

   உங்கள் தலைமையில் குஜராத் இனப்படுகொலைகளை நடத்தினீர்களே, ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்தீர்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் இல்லை என்று மறுப்பதற்கில்லை...

நீங்கள் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் ரத யாத்திரை என்று ஒரு ரத்த யாத்திரை நடத்தினார்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.
  மீரட், பாகல்பூர், பீவாண்டி, மும்பை, குஜராத், இப்படி இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தி சிறுபான்மை மக்களை கொன்று குவித்தீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.

 உங்கள் காவி பயங்கரவாதிகள் 'ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியாரையும், அவர் குழந்தைகள் இருவரையும்' கொடூரமாக எரித்து கொன்றார்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் மறுக்க முடியாது.

 கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி, கன்னியாஸ்திரி பெண்களை கற்பழித்தீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான நாள்தான்

பாபர் மசூதி என்ற பிறமத வழிபாட்டு தளத்தை உடைத்து, இந்தியாவின் மதச்சார்பின்மையை சீர் குலைதீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.

உங்கள் "ஹிந்துத்துவா காவி ஆட்சியை" இந்தியாவில் ஏற்ப்படுத்த வேண்டும் என்று 'சம்ஜாஉதா ரயில் குண்டு' வெடிப்பு முதல் 'மக்கா மஸ்ஜித் தொடர் குண்டு வெடிப்புகள் வரை நடத்தினீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.

  இவையெல்லாவற்றையும் மறைக்க பாபா ராம்தேவ் என்ற ஓலை பாம்பை அனுப்பி, ஊழல் ஒழிப்பு நாடகம் போடுகிறீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.

ஒரு சாதாரண தடி அடி நடத்தியதற்கு, இப்படி குதிக்கும் 'இந்த காவி பயங்கராவாதி மோடிதான்' குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான 'ஒரு மாபெரும் இன அழிப்பையே' முன்னின்று நடத்தினார்.

 இந்த மோடியை, 'இந்திய சிந்தனையாளர்கள்' ஸ்ரீலங்கா இனப்படுகொலை 'பயங்கரவாதி ராஜபக்சே' உடன் ஒப்பிடுகிறார்கள். இவரது ஆட்சியில்தான் லஞ்சம், ஊழல், குடிநீர் பற்றாக்குறை இப்படி மக்கள் அவதிப்படுகின்றனர்.
 இந்த 'காவி பயங்கரவாதிகள்' ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலத்தில் ஊழலும், லஞ்சமும் மலிந்து, குடுமிச்சண்டை நடக்கிறது அதைப்பற்றி இதுவரை யாரும் வாய்திறக்கவில்லை.

இவரது பயங்கரவாதத்தை பார்த்த மேற்க்கத்திய நாடுகள் இவருக்கு விசா வழங்க மறுத்து கேவலப்படுத்தியது. இந்தியாவின் ஒரு மாநில முதல்வருக்கு வெளிநாட்டு விசா மறுக்கப்பட்டது மொத்த இந்தியாவிற்கே அவமானம்.

இப்படி பட்ட யோகியர்தான் சொல்கிறார் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் மீது தடி அடி நடத்தியது தவறு என்று. இதை சொல்ல இவருக்கு எந்த யோகிதையும் இல்லை.

மேலும் இந்த ஊழல் எதிர்ப்பு என்பதே ஹிந்துத்துவாவை இந்தியாவில் நிலை நிறுத்தும் ஒரு பார்பன தந்திரமே அல்லாமல் வேறில்லை. இந்த நரபலி நாயகர்களை கடும் சட்டம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

1 comment:

  1. ஆடு நினைகிறது என்று ஓனாய் அழுதாம் அது போன்றுதான் இருக்கிறது

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.