Latest News

சீரியல்கள் குடும்பத்தை சீரழிக்குமா…

எப்படா சூரியன் மறையும்னு தவங்கிடக்கிற பெண்களை பட்டணம் முதல் பட்டிகாடு வரை பரவலாக காணமுடிகிறதுகாரணங்கள் பல அல்ல ஒன்றேஅது சீரியல்கள் என்கின்றனர் பெண்கள்..

திண்டிவனம் நகராட்சியில் பெண்களுக்கான பயிற்சியில் சிறப்பு பயிற்சியாளராக வெளிச்சம் செரீன் மற்றும் வெளிச்சம் மாணவர்களை அழைத்திருந்தனர் நகராட்சி நிர்வாகம்..

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பேச தொடங்கினார் செரின் அவர்கள்.. பெண்கள் தான் சமூகத்தை பிரசவிக்கிற மொத்த பங்களிப்பை பெற்றுள்ளார்கள். சமூகத்தை சரியாக வளர்த்தெடுக்கிற பக்குவம் ஒவ்வொரு பெண்மனிக்கும் உண்டு. ஏனெனில் ஒரு தாய் குழந்தையை வளர்த்தெடுப்பதில் இருந்து கடைசி காலம் வரை பெண்கள்தான் ஆனால் பெண்கள் இப்போது குழந்தைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று தோன்றுகிறது 

கலை நிகழ்ச்சிகளில் வெளிச்சம் மாணவர்கள்

குழந்தைகள் மீதான தமது பொறுப்பை தட்டி கழிக்கும் பாங்கு பெண்களுக்கு வளர்ந்திருக்கிறது, அல்லது வளர்த்திருக்கிறது இந்த சீரியல்கள். இதன் காரணமாக, பிள்ளைகளோடு பேசுவதில்லை, பிள்ளைகளை வேண்டுமென்றே டியூசன்களுக்கு அனுப்பிவிட்டு தொடங்குகிறது சீரியல் வாழ்க்கை.. படிக்க தெரியாத பெண்கள் தான் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்புவதற்க்கு எழுத படிக்க தெரியாததால் சொல்லிகொடுக்க தெரியவில்லை என்பதை சீரியல் பார்க்க காரணமாக சொல்கிறார்கள் என்றால்,.. படித்த பெண்களும் இதே காரணத்தை சொல்வதுதான் வியப்பாக இருக்கிறது.

இதனால் குழந்தைகள் எல்லா வகையிலும் சீரழிந்து போவதை காண முடிகிறது.. குறிப்பாக போன வருடம் தஞ்சாவூர் பக்கம் குடிக்க பணம் தரலைன்னு தாயை கொன்ற 5 வகுப்பு மாணவனை பற்றி படிக்கும் போது மனசுக்குள்ள படபடன்னு ஓடுகிறது. .கோலங்கள் நாடகத்தோட கடைசி எபிசோட பார்க்க முடியாததல் தீக்குளிச்ச மதுரை மீனா (10 வயசு) மாணவியை மறந்துட்டீங்களா.. என சொல்லும் போது தாய்மார்கள் சிலர் அழுவதை பார்க்க முடிந்தது.. பெண்பிள்ளைகளை வளர்ப்பதை தென்னம்பிள்ளையை வளர்ப்பதை போல கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் தவிறினால் இழப்பு நமக்குதான்….  மகள் அதிகமா சாப்பிடாம கொஞ்சமா சாப்பிடுவதை பார்த்து இனி கண்டிப்பீங்களா இல்லை, அவ அதிகமா சாப்பிடமாட்டான்னு சொல்லி அவ எதிர்காலத்தை நாசமாக்க போறீங்கிளா?.. இனி இந்தியாவில் பிறக்க போகும் பிள்ளைகள் 100% இரும்பு சத்து குறையா தான் பிள்ளைகள் பிறக்கும்னு புள்ளிவிவரம் சொல்லுது என்ன செய்ய போறீங்கஎன செரின் சொல்லும் போது இனிமகசாப்பிடலைன்னா செத்தாஎன ஒரு தாய் சொல்ல, எல்லோர் முகத்திலும் புன்னகை..

கொஞ்சம் சிரிக்க விட்டு உங்க பிள்ளையை அடிப்பதை முதலில் நிறுத்துங்கள்அவர்களுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லுங்கள் அதை கண்டுபிடிங்கள்ஏனெனில் குழந்தைகள் எல்லோருக்கும் முதல் எதிரி யாருன்னா அப்பா அம்மாதான்னு சொல்லுறாங்க. உங்க பிள்லை நீங்க சொன்னா கேட்காம யார் சொல்லி கேட்பாங்கஎன பேச எல்லோர் முகத்திலும் பயம் தெரிந்தது.. மெல்ல பேசி முடிக்க சரவெடியைவிட அதிகமாய் கரவோசை எழ அமர்ந்தார் செரின்.. அதனை தொடர்ந்து வெளிச்சம் மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..

நிகழ்ச்சி குறித்து பேசிய பெண்மனி ஒருவர்:

ஒரு தாயாய் நான் எனக்கான கடமையை இதுவரை சரியாக செய்யவில்லை என உணர்கிறேன்., வீட்டுவேலை, குடிகார வீட்டுகாரங்கிட்ட படுற அவஸ்தை, என எங்க கஸ்டத்தை போக்குதுன்னுதான் சீரியல்களை பார்க்குறோம். அதை மணிக்கணக்கா பார்த்து கொண்டிருப்பதால் பாலாகும் குடும்ப உறவின் புனிதத்தை வெளிச்சம் வெளிச்சமிட்டுகாட்டியதுஎங்களுக்கு கிடைத்தை போல் வெளிச்சம் பரவட்டும் என்றார்….

நன்றி: வெளிசசம மாணவர்கள்
தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.