அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை 7.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இதி ல், மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரம் பேரும், மாணவிகள் 3 லட்சத்து 63 ஆயிரம் பேரும், தனித் தேர்வர்கள் 57 ஆயிரம் பேரும் அடங்குவர்.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார்.
இதி்ல் ஓசூரை சேர்ந்த மாணவி ரேகா 1190 மதிப்பெண் பெற்று தமிழகத்திலேயே முதலிடத்தை பெற்று உள்ளார்...
கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேசன் மாணவன் வேல்முருகன் 1187 மதிப்பெண் பெற்று 2வது இடத்தை பெற்றுள்ளார்.
1186 மதிப்பெண்கள் பெற்ற 4 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர். நெல்லை எஸ்.ஜெ.எஸ்.எஸ்.ஜெ பள்ளி மாணவி வித்ய சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்துகவி, ஓசூர் பி.எஸ்.ரேகாவும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
நம் அதிரையில் உள்ள பள்ளிகளின் தேர்வு முடிவுகள் உங்கள் பார்வைக்காக.
வழக்கம் போல் நம்மூர் பள்ளி மாணவ மாணவியரும் 1000 மார்க்குகளுக்கு மேல் வாங்கி சாதனை படைத்துள்ளார்கள்.
வெற்றிபெற்ற மாணவ செல்வங்களுக்கு நம் அதிரைநிருபர் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நிறைய படித்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்துக்கும், நம் நாட்டிற்கும் நற்பெயர் பெற்றுத்தர வல்ல இறைவனிடம் து ஆ செய்கிறோம்.
நன்றி: Media Magic Adirai, SIS computer Adirai, Thatstamil.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment