Latest News

  

முஸ்லிம்கள் வாக்களிப்பது கடமையா?

தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில்
6 விழுக்காடு என அரசுப் பதிவேடு கூறுகின்றது. அதாவது 6 .5 கோடி மக்கள் தொகையில் 39 லட்சம் பேர் முஸ்லிம்கள்.
         இவர்களில் வாக்குரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டும் 40 சதவீதம். தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.
         ஆனால் தற்போது முஸ்லிம்களின் நிலைமை அரசியலில் செத்த பிணம். முஸ்லிம்கள் தங்கள் வாக்குரிமையை அல்லது நாடு வழங்கிய பெரிய உரிமையை வீணடித்ததே இதற்குக் காரணம்.
         முஸ்லிம்களின் மார்க்க வழிகாட்டிகள் இதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த  முன்வராதது ஏன்?...
          இறைவன் யாரை நாடுகின்றானோ அவரைதான் ஆட்சியில் அமர்த்துவான். யாரை நாடுகின்றானோ அவரை ஆட்சியில் இருந்து  அகற்றுவான் என்பதால், நாம் வாக்களிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது அறியாமை.
            ஜனநாயகம் முறையில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தேடுப்பதும்  நபி வழி தான் என்பது தெரியாதா? நாம் தேர்ந்தேடுக்கும் வேட்பாளர் இறைமறுப்பாளராக, சட்டத்திற்கும் குர்ஆன், ஹதீசுக்குப் புறம்பானவராக இருக்கும்போது நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துதான் நம்மில் பலரிடம்!
               நம் நாட்டில் நல்லவர்கள், இறைநம்பிக்கையாளர்கள் வேட்பாளராக நிற்க தடைஏதுமில்லையே?
              அப்படிப்பட்ட  ஒரு நல்ல வாய்ப்பை, மாற்றத்தை ஏற்படுத்துவது நம் மீது கடமையில்லையா?

இறைவன் திருக்குர்ஆனில்
"நாம் (இறைநம்பிக்கையாளர்களுக்கு) பூமியில் அதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள், ஜகாத் (தானம்) வழங்குவார்கள். மேலும் நன்மை புரியுமாறு ஏவுவார்கள், தீமையிலிருந்து  தடுப்பார்கள்". (திருக்குர்ஆன் 22  : 41 ) என்று கூறுகிறான்.


            வீட்டில் முடங்கி இருப்பதாலோ சத்தியத்தை மக்கள் மன்றத்தில் மறைப்பதாலோ ஆட்சியதிகாரம் வந்துவிடாது.
            மணிக் கணக்காய் அரசியல் பற்றி விவாதிப்போம்; ஆட்சி சரியில்லை என்று ஆயிரத்தெட்டு நொள்ளைக் காரணங்கள் கூறுவோம்: எல்லாமே கேட்டுப் போச்சு என்று புலம்புவோம்; ஆனால் வாக்களிக்க மட்டும் வாக்குச்சாவடிக்கு வரமாட்டோம். இது என்ன நியாயம்?
           அடையாள அட்டையைப்பெற்ற பின் வாக்களிக்க வரவில்லையெனில் அதைக் கள்ள வாக்காக மாற்ற நாமும் ஒரு காரணம். இதற்குத் துணை புரிகின்றீர்கள? முன்னாள் தேர்தல் ஆணையர், 'ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 15 வேட்பாளர்கள் நிற்கின்றார்கள். அவர்களில் நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள். யாருக்கும் விருப்பம் இல்லையெனில் '49 O ' என்ற படிவத்தைப் பூர்த்தி செய்து தருவது உங்கள் வாக்கை மற்றவர் போடாமல் இருக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்' என்கிறார்.
              இந்த வாய்ப்பையும் பயன்படுத்தலாம். ஆனால் வாக்களிக்காமல் இருந்து நாட்டு நடப்புகளைப் பேசுபவன், அரசியலை விமர்சனம் செய்பவன் செத்த பாம்புக்குச்சமம் .நல்ல வேட்பாளரை இழக்கவும் உங்களுடைய இச்செயல் காரணமாக ஆகி விடும்.
               எனவே நாம் நம்முடைய வாக்குகளைப் பதிவு செய்து நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவோம்!
 K.A.முஹம்மது ஹபிபுல்லாஹ்
நன்றி; சமரசம்
தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.