பழ. நெடுமாறன்
முட்டி மோதி, பிணங்கி, சுணங்கி ஏமாற்றுபவர் யார், ஏமாந்தவர் யார் என்பதெல்லாம் புரியாத நிலையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் களம் காண கட்சிகள் புறப்பட்டு விட்டன.
1967-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் தனியாகப் போட்டியிடும் வலிமையோ, துணிவோ தி.மு.க.வுக்குக் கிடையாது. 1972-ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க.வும் தனித்துப்போட்டியிட துணியவில்லை.
கூட்டணிக் கட்சிகளின் தோள் மீது ஏறி இரு கழகங்களும் தங்களை உயரமாகக் காட்ட முற்படுகின்றனவே தவிர, தனித்து நின்று தங்களின் குள்ள உருவத்தை அம்பலப்படுத்திக் கொள்ள முன்வரவில்லை.
ஆனால், தாங்கள்தான் பெரிய கட்சிகள் என்பதைப் போலவும், கூட்டுசேரும் கட்சிகள் எதுவானாலும் தங்களின் தயவில்லாமல் வெற்றிபெற முடியாது என்பதைப் போலவும் ஒரு மாயையை உருவாக்கி, மற்ற கட்சிகளுக்குப் பிச்சை போடுவதைப் போல சில தொகுதிகளைக் கொடுத்து ஆட்டிப்படைக்க இரு கழகங்களும் தவறுவதில்லை....
1967-ம் ஆண்டிலிருந்து இன்று வரை 44 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீட்டுக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரு கழகங்களின் பல்லக்குத் தூக்கிகளாகத்தான் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் கருதுகின்றன.
கூட்டணியில் உள்ள கட்சிகளை எவ்விதக் காரணமும் இல்லாமல் கழற்றிவிடுவதும், மீண்டும் வெட்கமில்லாமல் சேர்த்துக் கொள்வதும் இரு கழகங்களுக்கும் ஆகிவந்த கலையாகும்.
கூட்டணியில் சேர்ந்த பாவத்துக்காகக் கட்சிகள் இரு கழகங்கள் குறித்து எவ்வித விமர்சனமும் செய்வதைச் சகித்துக்கொள்ளும் பக்குவம் கழகத் தலைமைகளுக்கு அறவே கிடையாது. ஜனநாயக ரீதியில் கழக
ஆட்சிகளின் குறைகளைக் கூட்டணிக் கட்சிகள் சுட்டிக்காட்டினால் அதைப் பொறுத்துக்கொள்ளும் பக்குவமோ தவறுகளைத் திருத்திக் கொள்ளும் குணமோ கழகத் தலைமைகளுக்கு இருப்பதில்லை. மாறாகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை மிரட்டுவதும், அவதூறுகளை அள்ளி வீசுவதும், கூட்டணியில் இருந்து நீக்குவதும் போன்ற பாசிசப் போக்கு இரு கழகத் தலைமைகளுக்கும் நிறையவே உண்டு.
கூட்டணிகளில் யாரைச் சேர்ப்பது, யாரை நீக்குவது என்பது போன்ற முக்கிய பிரச்னைகளில் முடிவெடுப்பது கழகத் தலைமைகள் மட்டுமல்ல. தலைமைகளின் குடும்ப உறுப்பினர்களும் அல்லது குடும்பத்துக்கு நெருக்கமானவர்களும் இதில் தலையிடுகிறார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப முடிவுகளை இரு கழகத் தலைமைகளும் எடுக்கின்றன. இதில் இருவருக்குமிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது.
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, வேறு சிலரும் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், ஆகியோரின் தேர்விலும் தலையிடும் அவலப் போக்கு இரு கழகங்களிலும் நீடிக்கிறது.
மணல் திருடர்கள், கிரானைட் கொள்ளையர்கள், நாட்டு வளங்களைச் சூறையாடுபவர்கள், இயற்கைச் சூழலை மாசுபடுத்தும் மாபாவிகள், சாராய சாம்ராஜ்யவாதிகள் போன்ற சமூக விரோதக் கூட்டமும் இரு கழகங்களின் தலைமைகள் எடுக்கும் முடிவுகளைத் திருத்தவும், திசை திருப்பவும் சக்தி படைத்தவைகளாகத் திகழ்கின்றன.
தேர்தல் கூட்டணிக் கட்சிகளைவிட மிகஅதிகமான செல்வாக்குப் படைத்ததாக இந்தக் கொள்ளைக் கூட்டணிகள் விளங்குகின்றன. தேர்தல் கூட்டணிகளையே இவர்கள் தீர்மானிக்கிறார்கள். எவ்வித கூச்ச நாச்சமற்றவர்கள், மனசாட்சியை மறந்தவர்கள், தடித்த தோலர்கள், பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாதவர்கள் கைகோத்து நிற்கிறார்கள். தமிழக அரசையும், அதை நடத்தும் இரு கழகத் தலைமைகளையும் தங்களின் பண வலிமையால் ஆட்டிப் படைக்கிறார்கள்.
மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும் குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையிலும், இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனாலும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், கூட்டணி அரசின் நிறைகுறைகளை விமர்சிக்க ஒருபோதும் தயங்குவதில்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னை ஏற்பட்டபோது, இடதுசாரிக் கூட்டணியில் அங்கம் வகித்த பல கட்சிகள் தங்கள் அரசைக் கண்டிக்க ஒருபோதும் தயங்கவில்லை. தங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்த அந்தக் கட்சிகள் மீது இடதுசாரிக் கூட்டணியின் தலைமை கோபப்படவில்லை.
ஆனால், இங்கு என்ன நடக்கிறது? கழக ஆட்சியின் தவறைச் சுட்டிக்காட்டிக் கண்டித்த கம்யூனிஸ்டு தலைவர் தா. பாண்டியனின் கார் எரிக்கப்பட்டது. இதுவரை காரை எரித்த குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் அனைவராலும் நன்கு மதிக்கப்படும் தியாகசீலர் நல்லகண்ணு மீது முதலமைச்சர் கருணாநிதி சேற்றை வாரி இறைக்கத் தவறவில்லை. இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தியாகம், தொண்டு, துன்பம் ஆகியவற்றைத் தங்கள் தாரக மந்திரமாகக் கொண்டவர்கள். மக்கள் தொண்டுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தி.மு.க.விலோ அல்லது அ.தி.மு.க.விலோ, கம்யூனிஸ்டுகள் அளவுக்குத் தியாகம் செய்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், அந்தக் கம்யூனிஸ்டுகளை இரு கழகத் தலைமைகளும் நடத்தும் விதம் வேதனைக்குரியதாகும். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்துவரும் கம்யூனிஸ்டுகளை, கொள்கையற்ற கோமாளிகள் அவமானப்படுத்துகிறார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அவமானப்படுத்திய விதம் தமிழக மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவுக்கும் கடந்த
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment