பலஸ்தீன் மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் ஆதம் அபூ ஸில்மியா தகவலளிக்கையில், காயமடைந்த பலஸ்தீன் இளைஞரின் நிலை கவலைக்கிடமானதாக இருந்ததால் அவர் கமால் உத்வான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதே போன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் நாளாந்தம் ஏராளமான பலஸ்தீன் தொழிலாளர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், பலஸ்தீன் தொழிலாளர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை வேண்டுமென்றே இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், தொழிலாளர்களின் கால்களைக் குறிவைத்தே சுடப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நான்கு புறமும் வருடக்கணக்கில் தொடரும் முற்றுகையால் தமது வாழ்வாதாரத்துக்கு வழியின்றி அல்லற்படும் பலஸ்தீனர்கள், உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கூலித் தொழிலொன்றைச் செய்தேனும் அன்றாட ஜீவனோபாயத்தைக் கொண்டு நடாத்தக்கூடிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்நேரம்.காம்
No comments:
Post a Comment