Latest News

அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு-சுப்ரீம் கோர்ட்

அயோத்தி: நாளை (24-செப்-2010) வழங்கப்படுவதாக இருந்த அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட கருத்தை தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
அயோத்தி குறித்த 60 ஆண்டு கால வழக்கில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவிருந்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் திரிபாதி. நேற்று இந்த மனு கபீர், பாதக் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி விட்டனர்.



இதையடுத்து திரிபாதியின் மனு இன்று வேறு பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த இரு நீதிபதிகளும் ஆளுக்கு ஒரு கருத்தைத் தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து பெஞ்ச் உத்தரவிட்டது. முன்னதாக ஒரு நீதிபதி கூறுகையில், இந்த விவகாரத்தில் சமரசம் பேச வாய்ப்பு உள்ளது என்றால் அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஒரு சதவீத வாய்ப்பு இருந்தால் கூட பரவாயில்லை, அதை அளிக்க வேண்டும். ஒரு தீர்ப்பால் பலரும் பாதிக்கப்படக் கூடும். எனவே பேச்சுவார்த்தைக்கு மதிப்பளித்து அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. இந்த தீர்ப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அது மக்களைத்தான் பாதிக்கும். மக்களை பாதித்தால் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டைத்தான் குறை கூறுவார்கள். எனவே இந்த தீர்ப்பை தள்ளி வைக்கலாம் என்று தெரிவித்தார் என்றார்.
ஆனால் இன்னொரு நீதிபதி, இந்த மனுவையே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்மானமாக தெரிவித்தார். இருப்பினும் முதல் நீதிபதியின் கருத்தை மதிப்பதாக தெரிவித்த அவர் தீர்ப்பை தள்ளி வைக்க சம்மதித்தார். இதையடுத்து செப்டம்பர் 28ம்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதிகள், திரிபாதியின் மனு மீதான விசாரணையையும் அன்றைய தினத்திற்கே தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.இதன் மூலம் பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளிவராது என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும் செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப்பின் எதிர்காலம் அமைந்துள்ளது.


அயோத்தியில் பலத்த பாதுகாப்பு:


முன்னதாக தீர்ப்பு வெளியாவதாக இருந்ததால், அயோத்தி முழுவதும்யுபலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. .பி. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அயோத்தி, பைசாபாத், லக்னோ உள்ளிட்ட 19 முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். .பி. முழுவதும் அமைதிப் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தீர்ப்புக்குப் பிறகு அதை இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவதற்கும், எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பளிக்கப்படவுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வளாகத்திற்குள் நாளை யாரும் நுழையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வழக்குகள் உடைய வக்கீல்கள் மட்டுமே வர வேண்டும். வழக்குகள் எதுவும் இல்லாத வக்கீல்கள் வரக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. தீர்ப்பை வாசிகக்ப் போகும் 3 நீதிபதிகளுக்கும் மிக பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் இன்று தமிழ்நாட்டுக்கு வருவதாக இருந்தது. ஆனால் அயோத்தி தீர்ப்பு தொடர்பான பதட்டம் அதிகரித்திருப்பதால் அவர் தனது பயணத்தை ரத்து செய்து டெல்லியிலேயே தங்கியிருந்தார்.
பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை நம்ப முடியாது:



இதற்கிடையே, தீர்ப்புக்குப் பின்னர் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார் அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடலாம். அவர்களை நம்ப முடியாது. இப்படித்தான் 1992ம் ஆண்டு அவர்கள் அளித்த வாக்குறுதியை நாடு நம்பியது. ஆனால் அப்போது நடந்த தவறுக்கு இன்று வரை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவர்கள் விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் எச்சரித்துள்ளார்.
அதேபோல கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மதுக் கடைகளை மூடவும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.