Latest News

  

கம்ப்யூட்டர் விசன் சின்(ட்)றோம் - Computer Vision Syndrome (CVS)

இன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்கா முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான வாலிபர்கள், சிறுவர்கள் என புதிய தலைமுறையினர் அதிகம்மகவே இந்த கணினியால் கவரப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த செய்தி ஒரு விழிப்புணர்வுக்காக இங்கே இடப்படுகிறது.


கணினி பயன்பாட்டில் இருப்பவர்களில் 1 மணி நேரத்துக்குமேல் ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தினால் அவர்களுக்கு

1 . கண்ணில் எரிச்சல், வலி

2. தலைவலி (சாதாரண நெற்றிப்பொட்டில் வலிக்கும் தலைவலி அல்ல)
3 . கண் மங்கலாக, இரட்டிப்பாக தெரிவது
4 . கண் ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து விடுவது
5 . கழுத்து மற்றும் தோள்பட்டை வலி
6 . தன்னை அறியாமலேயே உடலில் ஏற்படும் சிலிர்ப்பு
7 . வெளிச்சத்தை கண்டால் கண் கூசுவது
8. தூக்கமின்மை
 போன்ற அறிகுறிகள் வரும். இது சாதரணமாக அனைவருக்கும் இருக்கும் ஒரு வியாதியாகி விட்டது. தொடர்ச்சியாக இந்நிலை நீடித்தால் அது கண் பார்வையை பாதிக்கும். இந்த நோய்க்கு கம்ப்யூட்டர் விசன் சின்றோம் (Computer Vision Syndrome (CVS)) என பெயர். கணினி திரையில் இருக்கும் ஒளிக்கதிர் கண்களில் உள்ள ஈரப்பதத்தை உளறச்செய்து விடுகிறது இதனால் சிறிது நேரத்தில் கண்களை நேரடியாக திரையின் ஒளிக்கதிர் பாதிப்பத்தின் மூலம் கண்களில் இருக்கும் சிறிய நரம்புகளும் பாதிப்படைகிறது. இதனால் கண்ணில் எரிச்சல், தலைவலி, பார்வை மங்குதல் மற்றும் கண் கூசுவது போன்ற அறிகுறிகள் தென்படுகிறது.


இதற்க்கு மருந்தோ மாத்திரைகளோ இல்லை. இந்த பதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து கணினி பயன்பாட்டை நிறுத்தவேண்டும் அல்லது 10 நிமிடத்திற்கு ஒருமுறை கணினி திரையிலிருந்து உங்களது பார்வையை 20-30 வினாடிகள் விளக்கி வேறு பொருளை பார்த்துவிட்டு மீண்டும் கணினித்திரையை பார்க்க வேண்டும் இந்த பயிற்சியின் மூலமாக சற்று இந்த பாதிப்பில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.


uv கண்ணாடிகள் உள்ளன ஆனால் அதுவும் 100 % பாதுகாப்பு அளிக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கண்ணாடிகளை கண் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்து பின் உபயோகிக்க வேண்டும். பார்வை குறைவுக்காக கண்ணாடி போடுபவர்களும் அவர்களின் பார்வை லென்சில் இந்த வகை uv கோட்டிங் சேர்த்து ஒரே கண்ணாடியாக போட்டுக்கொள்ளலாம்.

எதைப்போட்டாலும் பத்து௦ நிமிடத்திற்கு ஒருமுறை உங்களது பார்வையை திருப்புவது மட்டுமே உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வகை பாதிப்புகள் பழைய CRT மானிட்டரில் அதிகமாக இருக்கும், LED மற்றும் LCD மானிடர்களில் சற்றுக்குரைவாகவும் LAPTOP கணினியில் மிகக்குரைவாகவும் இந்த CVS பாதிப்பை உணரமுடியும். மேலும் போதுமான வெளிச்சம் இல்லாமல் கணினியை உபயோகிக்கும் போதும் இருட்டில் மொபைல் போன் திரையில் அதிகநேரம் உங்கள் பார்வையை செலுத்துவதும் இந்த CVS பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும் காரணிகளாகும்.

பொதுவாக கணினியை எந்த கோணத்தில் வைக்க வேண்டும், நம் பார்வை எந்த கோணத்தில் இருக்கவேண்டும் என்றெல்லாம் விதிகள் உண்டு ஆனால் பெரும்பாலும் யாரும் அதை கடைபிடிப்பதில்லை. கனிக்காக வடிவமைக்கப்படும் மேசைகளில் இந்த விதி பயன்படுத்தப் படுகிறது. அதை நீங்கள் ரெடிமேடாக வாங்கினாலும் சரியே.

அதன் படி மானிடர் திரை சுமார் 10 முதல் 20டிகிரி வரை மேல்நோக்கியும். மானிடருக்கும் கண்களுக்கும் இடையே சுமார் 20" முதல் 26 " வரையும் இடைவெளி இருக்கவேண்டும். இருக்கை சரியான முறையில் இருக்கவேண்டும், கணினி வைக்கப்பட்டு இருக்கும் மேஜை சரியான உயரத்திலும், கீபோடு சரியான இடத்திலும் அதாவது உங்கள் கை 90 டிகிரி சாய்ந்து இருக்குமாறு அமைந்து இருக்க வேண்டும். இதுபோன்ற அமைப்பில் இல்லாவிட்டாலும் உங்களின் உடலுக்கு CVS மற்றும் உடல்ரீதியான முதுகுதண்டு வலி போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

இது தவிர கணினியில் 8 மணிநேரம் வேலை பார்ப்பது, செய்தி மற்றும் கட்டுரைகளை கூர்ந்து நீண்டநேரம் படிப்பது, சினிமா காட்சிகளை நீண்ட நேரம் கணினி திரையில் பார்ப்பது போன்ற மேலதிக காரணங்களும் உண்டு.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.