வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு வரும் 25ஆம் தேதி நடத்தும் சாலை மறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு ஆதரவும் வரவேற்பும் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment