தற்போதைய பெருந்தொற்றில் இருந்து பொது மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு கவலை தெரிவித்தார்.
முகக்கவசங்களை அணிந்து, சமுக இடைவெளியைக் கடைப்பிடித்து, சுத்தத்தை பேணி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
முகக்கவசம் அணிவது கொவிட்-19-இல் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான சிறந்த முறையாகும் என்று கூறிய அவர், இந்த கொள்ளை நோய் மறையும் வரை போதுமான இடைவெளியைப் பேணுவது அவசியம் என்றார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றுமாறு உறுப்பினர்களை நாயுடு கேட்டுக் கொண்டார். "சத்தான உணவை உண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்து, யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

No comments:
Post a Comment