நடிகர் சூர்யா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சூர்யாவின் அறிவிப்பால் பாஜகவினர் கொதித்து எழுந்துள்ளனர். சமூகவல்தளங்களில் கடுமையாக தாக்கி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா என்பவர், 'நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குவார் என்று அறிவிப்பை கூறினார். அதோடு அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் நடிகர் சூர்யா இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு உள்ளார் என்றும் நீதிமன்றத்தையும் அவர் அவமதிப்பாக பேசியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அதே கருத்தை மாற்றி கூறினால் என்ன ஆகும் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சூர்யாவின் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நீதிமன்றத்தையும் இந்த அறிக்கையை அவமதித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சூர்யா மீது எந்த அவமதிப்பு வழக்கும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment