கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் கடந்த மாதம் செலுத்திய மின்
கட்டணத்தையே இந்த முறையும் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம்
தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை
கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றன. இதனால் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு பணி இந்த முறை
செய்யப்படவில்லை. அதனால் மக்கள் கடந்த ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில்
செலுத்திய மின் கட்டண தொகை அளவையே மார்ச் மாத மின்கட்டணமாக கட்டலாம் என
தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கூடுமானவரை மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு வலியுறுத்தியுள்ள நிலையில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்த அளிக்கப்படும் கடைசி நாள் நீட்டிக்கப்பட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in

No comments:
Post a Comment