Latest News

60 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை இல்லை வயலில் சடலம் எடுத்து செல்லும் அவலம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஆலம்பூண்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் இறந்தால் அடக்கம் செய்ய 1 கி.மீ. தூரத்தில் சுடுகாடு உள்ளது. ஆனால் இந்த சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை. இதனால் சடலங்களை அங்குள்ள விவசாய நிலங்கள், வயல் வெளிகளில் எடுத்து செல்லும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். கிராம சபா கூட்டங்கள், முதல்வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் புகார் தெரிவித்தும் பயனில்லையாம். இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று இறந்துவிட்டார். அவரது சடலத்தை அங்குள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களின் இடையே சேறும், சகதியுமான பாதையில் எடுத்து சென்றனர். சடலத்தை தூக்கிச் சென்றவர்கள் சேற்றில் சிக்கியதில், சடலம் கீழே விழுந்தது. பின்னர், சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், `கடந்த 60 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் சேற்றிலும், வயலிலும் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் நிலை உள்ளது. சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.