
இலங்கையில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு போல் இந்தியாவில் குண்டு
வெடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்று பாஜக
மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளின் நட்பு கட்சி என்றும்,
பாஜக ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே இந்தியாவில் தீவிரவாதம் இருக்காது என்றும்
அவர் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் மிண்டும் மகிந்தா ராஜபட்சே ஆட்சி
அல்லது கோத்தபயா ஆட்சி வரவேண்டும் என்றும் அவர் இன்னொரு டுவீட்டில்
தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணியம் சுவாமி என்பதும், மகிந்தா இந்தியா வரும்போதும், சுப்பிரமணியம் சுவாமி இலங்கை செல்லும்போதும் இருவரும் சந்தித்து கொள்வது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment