
கடலூரில் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஜெய்ஹிந்த் தேவி. இவர் கடலூர்
மாவட்டம் நெய்வேலியில் உள்ள தெர்மல் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி
வந்தார். இவருடைய கணவர் மாணிக்கவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக
சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு
ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த
நிலையில் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்
ஜெய்ஹிந்த் தேவி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது தற்கொலை தானா ? அல்லது மரணத்திற்கு வேறேதும் பின்னணி காரணம்
இருக்கிறதா ? என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment