ஆதார் குறித்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரையில்
வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி
வற்புறுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆதாருக்கு
எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5
நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அதேநேரம்,
செல்போன் எண்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை மார்ச் 31-ம்
தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்தக்
காலக்கெடு கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தநிலையில்,
கடந்த டிசம்பர் 15-ல் அந்தக் காலக்கெடுவை நீட்டிப்பதாக மத்திய அரசு
தெரிவித்தது.
இந்தநிலையில், ஆதார் தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வு
தீர்ப்பளிக்கும் வரை, செல்போன்கள் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார்
எண்ணை இணைக்கும்படி மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. மேலும், தட்கல் பாஸ்போர்ட் வழங்குவதற்குக் கூட ஆதாரைக்
கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரம், அரசு
அளித்துவரும் மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்குத் தடை இல்லை என்றும்
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment