
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் நடத்த உச்சநீதிமன்றம்
எதிர்ப்பு
சென்னை: ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த
உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஊழல் வழக்குகளில் தண்டனை
பெற்று சசிகலா, லாலு பிரசாத் யாதவ் போன்றோர் அரசியல் கட்சிகளை நடத்த
முடியாத நிலை விரைவில் உருவாகும் என தெரிகிறது.
அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தனர் அக்கட்சியின் பொதுக்குழு
உறுப்பினர்கள். ஆனால் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தல்
மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
பின்னர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து ஈபிஎஸ்-ஓபிஎஸ்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டனர். தற்போது
அதிமுக(அம்மா) அணியின் பொதுச்செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக
தினகரன் இருந்து வருகின்றனர்.
தண்டனை கைதி சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து
வருகிறார். தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி உட்பட பல வழக்குகள்
விசாரணையில் இருக்கின்றன.
தண்டனை கைதிகளும் உச்சநீதிமன்றமும்
இந்நிலையில் பொதுநலன் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனை பெற்ற
கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.
அதாவது, தண்டனை பெற்ற ஒருநபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியான
நிலையில் அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி தன்னுடைய வேட்பாளர்களை
தேர்தலில் போட்டியிட வைக்கிறார்.
தண்டனை கைதிகளும் அரசும்
தண்டனை பெற்ற கைதிகள் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற மனிதநேய
நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்கிற போது
வேறான ஒன்றாகும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுச்செயலராக முடியாது
இதனடிப்படையில் தண்டனை பெற்ற சசிகலா போன்ற கைதிகள் இனி அரசியல் கட்சிகளில்
பொறுப்பு வகிக்கவும் உச்சநீதிமன்றம் விரைவில் தடை விதிக்க வாய்ப்புள்ளது.
தேசிய அளவில் லாலு பிரசாத், ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றோருக்கும்
உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து நெருக்கடியைத் தரும்.
No comments:
Post a Comment