
இரண்டு நாள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா வீட்டில் வருமான வரித்துறை
சோதனை நடத்தப்பட்டது. பின் அது உண்மையான அதிகாரிகள் நடத்திய சோதனை இல்லை
என்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இதை நடத்தியவர் பிரபாகரன் என்ற நபர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. பின் அவர் போலீசால் கைது செய்யப்பட்டார்.
இந்த
நிலையில் மாதவன் சொல்லித்தான் வரி துறை அதிகாரி போல நடித்ததாக பிரபாகரன்
வாக்குமூலம் அளித்து இருந்தார். இப்போது வருமான வரித்துறை அதிகாரி போல்
நடித்தவருக்கும் மாதவனுக்கும் சம்பந்தமில்லை என போலீஸ் அறிவித்துள்ளது.

அவர்
வருமான வரி சோதனை நடத்திய போது அங்கு வந்த போலிசை கண்டதும் ஓடினார். அவரை
பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
பின் அவர் மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அப்போது
பிரபாகரன் வீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார். அதில் சினிமா
வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி அதிகாரி போல் மாதவன் நடிக்க
சொன்னார் என்று பேசி இருந்தார். எல்லா ஐடியாவும் கொடுத்தது மாதவன்தான்
என்று பேசி இருந்தார்.

பிரபாகரன்
வாக்குமூலத்தை அடுத்து மாதவன் உடனடியாக தலைமறைவு ஆனார். இதற்கு பின்
தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா இருப்பதாகவும் கூறப்பட்டது. ராஜாவை காலி செய்ய
மாதவன் இப்படி நடந்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த
நிலையில் தற்போது போலீஸ் இதில் விளக்கம் அளித்துள்ளது. அதில்
பிரபாகரனுக்கும் மாதவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றுள்ளது. பிரபாகரன்
தப்பிக்க வேண்டும் என்று பொய் சொல்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும்
பிரபாகரன் பங்குச்சந்தையில் ரூ.20 லட்சம் முதலீட்டை இழந்ததால் மோசடி
செய்து பணம் சேர்க்க திட்டமீட்டு இருக்கிறார் என்றும் காவல்துறை
கூறியுள்ளது. போலி அடையாள அட்டை, சோதனைக்கான கடிதத்தை பிரபாகரனே
தயாரித்தார் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

No comments:
Post a Comment