எம்எல்ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான 
மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் 
செய்தார்.அதிகரிப்புகடந்த ஆண்டு மாதம் சட்டசபையில், முதல்வர் பழனிசாமி 
மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக, இம்மாதம்
 முதல் உயர்த்தப்படும் எனவும் தொகுதி மேம்பாட்டு நிதியும், 2.5 கோடி 
ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 
எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும்
 அதிகரிக்கப்பட்டது. தாக்கல்இந்நிலையில், எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு 
மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் 
மூலம் பிப்ரவரி மாதம் எம்எல்ஏக்களுக்கு நிலுவை தொகையுடன் ரூ.
3 லட்சம் கிடைக்கும். இந்த மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு 
தெரிவித்துள்ளது.எதிர்ப்புஎம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வுக்கு திமுக 
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் 
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில், சம்பள உயர்வு மசோதா 
அறிமுகபடுத்தப்பட்ட பின்னர் திமுக கொறடா எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். 
பஸ் ஊழியர்கள் போராடி வரும் நிலையில், நிதி நெருக்கடியில் உள்ளதாக அரசு 
கூறும் நிலையில் சம்பளம் உயர்த்தப்பட்டால் மக்கள், எம்எல்ஏக்களை பார்த்து 
எள்ளி நகையாடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு தொடர்பாக கடந்த 2017 ஜூலை 19 ல் சட்டசபையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு * எம்.எல்.ஏ.,க்களின் மாதாந்திர சம்பளம், 8,000 ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். ஈட்டுப்படி, 7,000த்தில் இருந்து, 10 ஆயிரமாக வும், தொலைபேசிப்படி, 5,000த் தில் இருந்து, 7,500 ஆகவும், தொகுதிப்படி, 10 ஆயிரத்தில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்* தொகுப்புப்படி, 2,500த்தில் இருந்து, 5,000 ரூபாயாகவும்; வாகனப்படி, 20 ஆயிரத்தில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் அஞ்சல்படி, 2,500 ரூபாயும் தொடரும். தற்போது, எம்.எல்.ஏ.,க்கள், மாதந்தோறும் சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து, 55 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.
தற்போதைய உயர்வால், இந்த மாதம் முதல், 1.05 லட்சம் ரூபாய் பெறுவர்* எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பள உயர்வு, அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கும் பொருந்தும். ஆனால், அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோ ருக்கான, ஈட்டுப்படி, 15 ஆயிரம்; சில்லரை செலவினப்படி, 10 ஆயிரம்; தொகுதிப் படி, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். *துணை சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி, 15 ஆயிரம்; சில்லரை செலவினப்படி,7,500; தொகுதிப்படி, 25 ஆயிரம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்* ஓய்வு பெற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப் படும், மாத ஓய்வூதியம், 12 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங் கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மறைந்த பிறகு, அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப் படும், குடும்ப ஓய்வூதியம், 10 ஆயிரம் ரூபா யாக அதிகரிக்கப்படும்.
*முன்னாள் எம்.எல்.ஏ.,க் களின் மருத்துவ சிகிச்சைக்கு வழங்கப்படும் தொகை, ஆண்டுக்கு, 12 ஆயிரத்தில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். உயர்த்தப் பட்ட சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர படிகள், இம்மாதம், 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும்* எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, இரண்டு கோடியில் இருந்து, 2.5 கோடி ரூபாயாக வழங்கப்படும் சட்டசபை காவலர் மற்றும் ஏட்டுகளுக்கு வழங்கப்படும் தினப்படி, 50லிருந்து, 100 ரூபாயாகவும், சப் - இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ளவர்களுக்கு, தினப்படி, 55லிருந்து, 110 ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும்.

No comments:
Post a Comment