என்ன பாதுகாப்புக்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் ஆதார் விவரங்கள்
அரசால் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது என்று எட்வர்ட் ஸ்நோடன் கருத்து
தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின்
கான்ட்ராக்கடரும், அமெரிக்க உளவுதுறை ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்
எட்வர்ட் ஸ்நோடன் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.500க்கு ஆதார் விவரம்
தி
டிரிபியூன் ஆங்கில நாளேடு சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், “ 500 ரூபாய்
கொடுத்தால் 10 நிமிடங்களில் 100 கோடி நபர்களின் ஆதார் விவரங்களைப் பெற
முடியும்’’ என்று ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டது. கோடிக்கணக்கான மக்கள்
தங்களின் வங்கிக்கணக்கு, உடல் அடையாளங்கள் உள்ளிட்டபல விவரங்களை ஆதார்
அட்டையில் பதிவுசெய்துள்ள நிலையில், அதுகுறித்து பெரிய அச்சம் ஏற்பட்டு,
பரபரப்பை உண்டாக்கியது.
மறுப்பு
இந்த
செய்தியை மறுத்த ஆதார் அட்டை வழங்கும் உதய் அமைப்பு, அதுபோன்று தவறாக
பயன்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக
முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
டுவிட்டரில் பகிர்வு
இந்த
செய்தி குறித்து பத்திரிகையாளர் ஜாக் விட்டேக்கர் தனது டுவிட்டரில்
தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “ இந்தியாவின் தேசிய புள்ளிவிவரப்
பட்டியலில் 120 கோடி மக்களின் தனிப்பட்ட விவரங்கள், தகவல்கள் இருக்கின்றன.
இந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. தனி
மனிதர்களின் தகவல்கள் திருடப்பட்டு, ரூ. 500க்கு விற்பனை
செய்யப்பட்டுள்ளது’’ எனப் பதிவிட்டு இருந்தார்.
தவறாகவே பயன்படுத்தப்படும்
இந்த
டுவிட்டுக்கு பதில் அமெரிக்க உளவுதுறை ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்
எட்வர்ட் ஸ்நோடன் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில், “
வரலாற்றைப் பார்க்கும்போது, அரசு என்பது, மக்களின் தனிப்பட்ட தகவல்களைப்
பெற்று அதை ஆய்வு செய்து, தவறாகப் பயன்படுத்துவது என்பது இயல்பான
ஒன்று. என்னதான் தவறுகளைத் தடுக்க சட்டங்கள் இருந்தாலும், ஆதார் அட்டை
விவரங்கள் அரசால் தவறாகவே பயன்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment