Latest News

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: பஜ்ரங் புனியாவிற்கு தங்கம் - சரிதாவிற்கு வெள்ளி

 Asian Wrestling Championship: India's Sarita gets silver
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் மோதிய இந்திய வீராங்கனை சரிதா வெள்ளி வென்றுள்ளார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாக்ஷி மாலிக், சரிதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவும், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் சரிதாவும் இறுதிப் போட்டிக்கு நுழைந்தனர்.

தங்கம் வென்ற பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் தென்கொரியா வீரரை வீழ்த்திய இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும் வெள்ளி வென்ற சரிதா பெண்கள் 58 கி.கி., எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா, கிர்கிஸ்தானின் டின்பேகோவாவை எதிர்கொண்டார். ஆரம்ப முதலே புள்ளிகள் பெறுவதற்கு திணறி வந்த சரிதா கடைசியில் டின்பேகோவாவிடம் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி வரை சென்று வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.