Latest News

மோசமான பிரதமர் மோடி".. கூகுள் மீது கேஸ் போட்ட விஎச்பி!

 VHP leader files complaint against Goolge in UP
பிரதமர் நரேந்திர மோடி+ குறித்து அவதூறு தகவல் தருவதாக கூறி, கூகுள் மீது உ.பியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் இயக்கத் தலைவர் ஆர்கே அவஸ்தி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நாட்டிற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழும் பிரதமர் மோடி குறித்து தேடல் களஞ்சியமான கூகுள் தவறான தகவலை பரப்பி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய பின் அதில் உண்மையான குற்றச்சாட்டு என்பது நிரூபணமானதால் கூகுள் மீது ஐடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியின் புகைப்படம் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து, கூகுள் நிறுவனம் அதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது உ.பியில் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.