நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாத
வகையில் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர்
விஷால் தெரிவித்துள்ளார்.
புதியதலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
கமல்ஹாசன், மக்கள் விரும்பாத நிலையில் தமிழகத்தில் அரசு நான்கு ஆண்டுகள்
நீடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும் கட்டாய திருமணம் போல ஆட்சியை
ஏன் நீடிக்க வேண்டும் எனவும் கூறினார்.
தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத்
தேவையான புதிய தலைவரை மக்களே தேர்வு செய்யட்டும் என்றும் கமல்ஹாசன்
தெரிவித்திருந்தார். கமலின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்
கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்
என்று கூறிய கருத்து ஆளும் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஸ்வரூபம் திரைப்படம்
திரையிட முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா எனவும், அவ்வாறு இருக்கும்
போது இந்த ஆட்சி தொடரக்கூடாது என கமல் கூறி வருவது நன்றி மறந்து
செயல்படுவது போல் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் கமலுக்கு 65
வயதுக்குப் பிறகே ஞானோதயம் வந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்கப்
பொதுச் செயலாளர் விஷால், "நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் ரீதியாக எந்தவித
பாதிப்பும் ஏற்படாத வகையில் நடிகர் சங்கம் துணை நிற்கும் " என்று கூறினார்.
மேலும், அரசையும், முதல்வரையும் விமர்சிப்பது கமலின் தனிப்பட்ட கருத்து
என்றும் விஷால் கூறினார்.
No comments:
Post a Comment