Latest News

ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ அளித்த சர்வதேச சிகிச்சை... மருத்துவ செலவு எவ்வளவு?

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரபல மருத்துவர் ஜான் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் இணைந்து சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை செய்தனர். ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். சர்வதேச தரத்தினால் ஆன உயர் சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. 75 நாட்களும் ஜெயலலிதாவிற்கு அரசுத் தரப்பில் செலவிடப்பட்ட தொகையை அறிய, தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பலர் முயன்று வருகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் அனைத்தையும், அரசே ஏற்றுக் கொள்ள விதிகளில் வாய்ப்புள்ளது. அந்த அடிப்படையில்தான், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறன், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட பலருக்கும், அரசுத் தரப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில் மொத்தம் 30 அறைகள் உள்ளன. முதல் 2 நாட்களுக்கு மற்ற நோயாளிகளும் அதில் இருந்தனர். அதன் பின்னர் அங்கு இருந்த அனைவரும் மாற்றப்பட்டு முதல்வர் மட்டுமே அந்த தளத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கென தனியாக அறை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையின் உயர் ரக அறையான சூட் ரூமின் ஒரு நாள் வாடகை 26,300 ரூபாய்.

அறை வாடகை எவ்வளவு இரண்டு சூட் ரூம்களை இணைத்து புது அறையாக மாற்றப்பட்டு இருந்தால் ஒருநாளைக்கு முதல்வர் அறைக்கு மட்டும் 52 ஆயிரத்து 600 ரூபாய் வாடகையாகும். அந்த தளத்தில் உள்ள மற்ற 28 அறைகளில் 8 அறைகள் பொது வார்டாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொது வார்டுக்கு, அறை ஒன்றுக்கு 3,500 ல் இருந்து 5,200 ரூபாய் வரை நாள் வாடகை வசூலிக்கப்படுகிறது.

சில கோடிகளை எட்டும் அடுத்த 10 அறைகள் தனி வார்டுகள், அறை ஒன்றுக்கு ரூ.8,500ல் இருந்து ரூ.8,800 வரை உள்ளது. மீதம் உள்ள அறைகள் மூன்று வகை சூட் ரூம்கள் உள்ளன. அதன் தொடக்க வாடகை 12,500 ரூபாயில் இருந்து 26,300 வரை உள்ளது. மொத்தம் முதல்வர் தங்கிய, தங்காத என அந்த தளத்துக்கான ஒரு நாள் வாடகை மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கும் என்கின்றனர்.

எக்மோ சிகிச்சை செலவு கடந்த டிசம்பர் 4ம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட போது எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு சில லட்சங்கள் செலவானது. எக்மோ கருவி மூலம் 24 மணி நேரத்திற்கும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரூ. 6 கோடி செலவு? கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவுக்கு, ஆறு கோடி ரூபாய் வரை, மருத்துவத்துக்காக செலவிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையை, அரசுத் தரப்பில் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கோடி செலவழித்தும் ஜெயலலிதாவின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியாமல் போனது என்பதுதான் மிகப்பெரிய துயரம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.