திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ்
கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வரவுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
தி.மு.க, தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டை
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் கட்சி
தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்த வண்ணம்
உள்ளனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை
காலை 11 மணிக்கு சென்னை வருகிறார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்
திக்விஜய்சிங்கும் வருகிறார். இருவரும் காவேரி மருத்துவமனைக்கு சென்று
கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிவார்கள் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment