சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்
நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் பரவிய
நிலையில் அவரது மகள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க
முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து ஏதும்
தெரிவிக்கவில்லை.
பல்வேறு முன்னணி தலைவர்களும் சசிகலாவை பொதுச்செயலாளராக்க ஆதரவு
தெரிவித்து பேசிவிட்ட நிலையில், எப்போதும் முந்தி கருத்து சொல்லும்
நாஞ்சிலாரை காணவில்லை என்றதும் வதந்திகள் பரவின.
நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டே வெளியேறப் போவதாக சமூக வலைத்தளங்களில்
செய்தி பரவிய நிலையில், இதுகுறித்து அவரது மகள் மதிவதனி கருத்து
கூறியுள்ளார். அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் சிறு சந்திப்புக்கு அவர்
ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, தனது தந்தை அரசியலில் இருந்து விலகுவதாக
வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அவர் கூறினார்.
நாஞ்சில் சம்பத் விரைவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன.


No comments:
Post a Comment