புயல் பாதிப்பை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3
மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்றால் சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் பெரும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பலத்த சூறைக் காற்றால் ஏராளமான மரங்கள்
சாலைகளில் முறிந்து விழுந்தன. இதனால் நகரின் முக்கிய சாலைகளில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் மின் வினியோகம் இன்னும் சீராகவில்லை.
சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூர், மடிப்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட
நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் மின் விநியோகம் ஓரளவுக்கு சீராகியுள்ளது.
பல பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் மொபைல் டவர்கள், ஏடிஎம் இயந்திரங்கள்
செயல் இழந்துள்ளன. இதன்காரணமாக, தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவை
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புயல் பாதிப்பை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித் துறை
அமைச்சர் மஃபா. பாண்டியராஜன் விடுமுறை அறிவித்துள்ளார்.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில்
செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுவதாக
உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment