கருப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து அரசிடம் தெரிவிக்க
மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று
தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கணக்கில் காட்டப்படாத பணம்
வைத்திருப்போர் தாமாக முன்வந்து விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு கால
அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய
காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா கூறுகையில்,
கணக்கில் காட்டப்படாத வருமானத்தை தாமாக முன்வந்து மார்ச் 31ம் தேதிக்குள்
தெரிவிக்கலாம். அரசுக்கு வருமானவரி செலுத்தாமல் பணத்தை பதுக்கியவர்களின்
விவரத்தையும் தெரிவிக்கலாம்.
கறுப்புப்பண மாற்றம் குறித்த தகவலை blackmoneyinfo@incometax.gov.in என்ற
மின்னஞ்சலிலும் தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிக்கப்படும் நபரின் பெயர்
ரகசியமாக வைக்கப்படும். கணக்கில் காட்டப்படும் பணத்திற்கு 50 சதவீதம்
வரிவிலக்கு அளிக்கப்படும். மேலும் அபராத வரி செலுத்தினால் நடவடிக்கை
இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment