கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரன் தேவையா ?
காவிரி பிரச்சனையை முன்வைத்து கர்நாட்காவில் வெடித்துள்ள வன்முறை
சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். தமிழகம்,
கர்நாடகா மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்க கூடாது என
வலியுறுத்தி கன்னட அமைப்புகள் உச்சகட்ட வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர்களை கண்டதும் தாக்குகின்றனர்... தமிழக வாகனங்கள் கண்ணில்பட்டால்
தீக்கிரையாக்கிவிடுகின்றனர்..
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று தமது
ட்விட்டர் பக்கத்தில் வன்முறை சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், வன்முறை சம்பவங்கள் தனிப்பட்ட
முறையில் வருத்தத்தையும் கவலையையும் தருகின்றன; பிரச்சனைக்கு
சட்டப்பூர்வமாக பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும். இரு மாநில
மக்களும் நாட்டின் நலனே முக்கியம் என்பதை கருத வேண்டும். இரு மாநில
மக்களும் நல்லிணக்க சூழலை உருவாக்க வேண்டும்.
இரு மாநில மக்களும் பொறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment